Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்சே புதுதில்லி வந்தார்


இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்சே இன்று மாலை புதுதில்லி வந்தடைந்தார். நமது பிரதமரின் அழைப்புக்கு இணங்க அவர் இந்தியாவில் 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். உயர்மட்ட தூதுக் குழுவினருடன் இலங்கைப் பிரதமர் இங்கு வந்துள்ளார். முக்கிய நிகழ்ச்சிகள் தினமான 8 ஆம் தேதி பிரதமருடன் அவர், பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்துவார். நமது குடியரசுத் தலைவரையும் அவர் சந்திப்பார். காலையில் வெளியுறவு அமைச்சர், இலங்கை பிரதமரைச் சந்திப்பார்.

புதுதில்லியில் தமது அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இலங்கை பிரதமர் கொழும்பு திரும்புவதற்கு முன்னதாக, வாரணாசி, சாரநாத், புத்தகயா, திருப்பதி ஆகிய இடங்களுக்கு பயணம் செய்வார். இருநாடுகளுக்கும் இடையே தொடர்ந்து உயர்மட்ட அளவில் பயணங்கள் நடைபெற்று வருகின்றன. அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே தமது தேர்தல் வெற்றியை அடுத்து, அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் உடனடியாக முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.