பி.எம்.இந்தியா
இளைஞர்களின் நலன், எதிர்காலத்தைவிட வேறு எதுவும் மிகமுக்கியமில்லை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் கசிவுகளில் தொடர்புடையவர்களுக்கு விரைவாக, கடும் தண்டனையை உறுதிசெய்யும் வகையில் விரைவு நீதிமன்றங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
இது மாணவர்களின் நலனைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டுள்ள திரு மோடி, இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு ஏற்படுத்த முயற்சிக்கும் எவரும் தப்பிக்க முடியாது என்று பிரதமர் உறுதிபட கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:
“நமது இளைஞர்களின் நலன், எதிர்காலத்தைவிட வேறு எதுவும் மிகமுக்கியமில்லை!
வினாத்தாள் கசிவுகளில் தொடர்புடையவர்களுக்கு விரைவாக, கடும் தண்டனையை உறுதிசெய்யும் வகையில் விரைவு நீதிமன்றங்களை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம். இது மாணவர்களின் நலனைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதி. இளைஞர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு ஏற்படுத்த முயற்சிக்கும் எவரும் தப்பிக்க முடியாது.
***
(Release ID: 2288134)
SS/IR/KPG/KR
Nothing is more important than the welfare and future of our youth!
— Narendra Modi (@narendramodi) July 23, 2026
We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this…