Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இஸ்ரேல் பயணத்தின்போது, பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்ட ஊடக அறிக்கை (ஜூலை 5, 2017)

இஸ்ரேல் பயணத்தின்போது, பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்ட ஊடக அறிக்கை (ஜூலை 5, 2017)

இஸ்ரேல் பயணத்தின்போது, பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்ட ஊடக அறிக்கை (ஜூலை 5, 2017)

இஸ்ரேல் பயணத்தின்போது, பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்ட ஊடக அறிக்கை (ஜூலை 5, 2017)


மேதகு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ அவர்களே, ஊடக உறுப்பினர்களே,
உங்களது சிறப்பான வரவேற்புக்கு நன்றி. உங்களது நேரத்தை எனக்காக ஒதுக்கியதற்கும், நட்புறவுக்கும் நன்றி. நீங்களும், திருமதி.நேதன்யாஹூவும் எனக்கு நேற்று அளித்த மிகவும் அற்புதமான இரவு விருந்துக்கு மனதார பாராட்டு தெரிவிக்கிறேன். திருமதி.நேதன்யாஹூவை நேற்று இரவு சந்தித்துப் பேசியபோது, உங்களது குடும்பத்தைப் பற்றி தெரிந்து கொண்டேன். குறிப்பாக, உங்களது தந்தை குறித்து நீங்கள் கூறியது, உங்களது அழகான நாட்டை, புதிய உச்சத்துக்கு கொண்டுசென்ற அனுபவத்தை எனக்கு தந்தது. இன்னல்களிலிருந்து மீண்டுவந்து முன்னேற்றத்தை ஏற்படுத்திய மற்றும் அனைத்து கொடுமைகளையும் புத்தாக்கமாக மாற்றி, வெற்றிகண்ட உங்களது மக்களின் வெற்றிப்பாதை இந்தியாவை வியக்கவைக்கிறது. அரிதான இந்தப் பயணத்தில், இஸ்ரேலில் நான் இருப்பதை பெருமையாக கருதுகிறேன். நமது நவீனகால பயணத்தில், நமது பாதைகள் வேறுபட்டிருக்கலாம். ஆனால், ஜனநாயக மதிப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி மீதான நமது நம்பிக்கைகள் ஒரே மாதிரியானவை.

நண்பர்களே,

இந்தப் பயணமானது,

• நமது நட்புறவு பந்தத்துக்கு புத்துயிர் அளித்தல்

•நமது உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்குதல்

• இரு நாடுகளும் இணைந்து, செயல்பாடுகளில் புதிய உச்சத்தை நோக்கி பயணித்தல் ஆகியவற்றுக்கு வாய்ப்பு அளித்துள்ளது.

பிரதமர் நேதன்யாஹூவும், நானும், பல்வேறு தரப்பட்ட விவகாரங்கள் குறித்து பயனுள்ள விவாதங்களை நடத்தினோம். இருதரப்பு வாய்ப்புகள் குறித்து மட்டுமல்லாது, நமது ஒத்துழைப்பானது எவ்வாறு உலக அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு உதவும் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினோம். நமது இரு நாடுகளுக்கும் உள்ள ஒரே மாதிரியான செயல்பாடுகள் மூலம், நமது மக்களுக்கு இடையே பந்தத்தை ஏற்படுத்தும் வகையில், நல்லுறவை கட்டமைப்பதே நமது இலக்கு.

நண்பர்களே,

புத்தாக்கம், நீர் மற்றும் வேளாண் தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் உள்ளது. இவை அனைத்தும், இந்தியாவின் வளர்ச்சியில் நான் முக்கியத்துவம் அளிக்கும் துறைகளில் இடம்பெற்றுள்ளன. நீர் மற்றும் வளங்களை சிறப்பாக பயன்படுத்துவது; நீர் சேமிப்பு மற்றும் அதனை தூய்மையாக்குதல்; வேளாண்மைத் துறையில் உற்பத்தியை அதிகரித்தல் ஆகியவை நமது இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவதில் முக்கியப் பகுதிகள் என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டோம். நமது விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து, இந்தத் துறையில், பரஸ்பரம் பயனடையும் வகையிலான தீர்வுகளை உருவாக்கி, செயல்படுத்த முடியும் என்பதில் நாம் ஒத்த கருத்துடன் உள்ளோம். தொழில் துறை வளர்ச்சிக்கான ஆய்வுப்பணிகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இருதரப்பு தொழில்நுட்ப புத்தாக்க நிதியத்தை உருவாக்குவது என்ற நமது முடிவு, இந்த இலக்கை எட்டை உதவும். வலுவான நட்புறவுக்கு இருவழி வர்த்தகம் மற்றும் முதலீடு அடித்தளமாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். இந்த கோணத்தில் அதிக அளவில் செயல்பட வேண்டும் என்று நானும், பிரதமர் நேதன்யாஹூவும் ஒப்புக் கொண்டோம். இதுபோன்ற முயற்சிகளுக்கு இரு நாடுகளிலும் உள்ள தொழில்நிறுவனங்கள் தொடக்கத்தில் தலைமைவகிக்க வேண்டும். நாளை நடைபெறும் தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் இந்த செய்தியையும் தெரிவிக்க உள்ளோம்.

நண்பர்களே,

இந்தியாவும், இஸ்ரேலும் நெருக்கடியான புவியமைப்பில் அமைந்துள்ளன. பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதை நாங்கள் அறிந்துகொண்டுள்ளோம். தீவிரவாதம் பரப்பும் வன்முறை மற்றும் விரோதத்தால், நேரடியாக இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும் அதே நிலைதான். நமது பாதுகாப்பு நலன்களை பாதுகாப்பதில் அதிக அளவில் ஒருங்கிணைந்து செயல்பட நானும், பிரதமர் நேதன்யாஹூவும் ஒப்புக் கொண்டுள்ளோம். மேலும், இணையதளம் உள்ளிட்ட வளரும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட முடிவுசெய்துள்ளோம். மேற்கு ஆசியா மற்றும் விரிவான பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். அமைதி, பேச்சுவார்த்தை மற்றும் கட்டுப்பாடு ஆகியவை ஏற்படும் என்பது இந்தியாவின் நம்பிக்கை.

நண்பர்களே,

நமது மக்கள், இயற்கையாகவே உறவுடனும், ஒருவருக்கொருவர் பரஸ்பர நலனுடமும் உள்ளனர். இந்திய வம்சாவளி யூத சமூகத்தினர், இந்த பந்தத்தை நமக்கு நினைவூட்டுகின்றனர். எதிர்காலத்திலும் இதே நிலையில் இருப்பதற்கு இவர்கள் பாலமாக உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக, அதிக அளவிலான இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள், இந்தியாவுக்கு வந்துள்ளனர். அதேநேரத்தில், அதிக அளவிலான இந்திய மாணவர்கள், தங்களது உயர்நிலைக் கல்வி மற்றும் ஆய்வுப்பணிகளுக்காக உங்களது தலைசிறந்த பல்கலைக் கழகங்களை தேர்வுசெய்கின்றனர். பழைய மற்றும் புதியதாக உள்ள இந்த இணைப்புகளின் பலம், நம்மிடையே 21-ம் நூற்றாண்டுக்கான நட்புறவை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
இங்கிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இஸ்ரேலின் ஹைஃபா நகரம், வரலாற்றின் அம்சமாக உள்ளது. இது, எனது நாட்டுக்கு மிகவும் நெருக்கமானது. ஹைஃபா நகரத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதற்காக முதலாம் உலகப் போரில், 44 இந்திய வீரர்கள், தங்களது இன்னுயிரை தந்தனர். அவர்களது இறுதி இடம் இந்த நகரம்தான். நமது தியாகம் மிக்க இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஹைஃபா நகருக்கு நாளை நான் பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

மேதகு நேதன்யாஹூ அவர்களே,

இஸ்ரேலில் இருந்த 24 மணிநேரமும், பயனுள்ள வகையிலும், மறக்க முடியாததாகவும் அமைந்தது. நான் இங்கு தங்கியிருக்கும் மற்ற நேரங்களும், இதேபோல, அற்புதமானதாக இருக்கும் என்று நான் உறுதியாக கூறுகிறேன். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, நீங்களும், திருமதி. நேதன்யாஹூவும், உங்களது குடும்பத்தினரும் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். உங்களது அற்புதமான வரவேற்புக்கும், உபசரிப்புக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி,

மிக்க நன்றி. சலோம்!