Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பின் பேரில், அவருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்


இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பின் பேரில், அவருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.

இந்தியா-இஸ்ரேல் இடையேயான உறவுகளில் நீடித்து வரும் முன்னேற்றத்தை இரு தலைவர்களும் வரவேற்றதுடன், இரு நாடுகளுக்கும் இடையேயான சிறப்பு உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான பரஸ்பரம் தங்களது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

மேற்கு ஆசியாவில், அண்மை நிகழ்வுகள் குறித்தும், இரு தலைவர்களும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், அப்பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும்   வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தை, தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மட்டுமே சிறந்த வழி என்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326754&reg=3&lang=1

(Release ID: 2326754)

****

TV/SV/SH