Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஈரானின் வல்லமை மிக்க தலைவருக்கும் அதிபர் ரவுஹானிக்கும் பிரதமர் வழங்கிய வெகுமதி


ஈரானின் வல்லமை மிக்க தலைவர் முதுபெரும் ஆயத்துல்லா சாயித் அலி ஹொசைய்னி காமேனிக்கு, 4-வது கலிப் ஹஸ்ரத் அலியின் அரிய 7 – ம் நூற்றாண்டு கையெழுத்துப் பிரதி புனித குர் -ஆனை பிரதமர் இன்று வழங்கினார். மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் ராம்பூர் ராசா நூலகத்தின் பொக்கிஷமாக கருதப்படும் இந்த திருக்குரான் குஃபிக் அரபி மொழியில் எழுதப்பட்டதாகும்.

ஈரான் அதிபர் டாக்டர் ஹசன் ரவுஹானிக்கு, மிர்சா ஆசாதுல்லாகான் கலிபின் பிரத்தியேகமாக புதுப்பிக்கப்பட்ட குலியாத்-இ-பார்சி-இ-கலிப் என்ற பாரசீக மொழிக் கவிதை தொகுப்பையும் பாரசீக மொழியில் சுமர்சந்த் மொழி பெயர்த்த ராமாயணப் பிரதியையும் பிரதமர் பரிசளித்தார்.

1863-ம் ஆண்டு அச்சிடப்பட்ட குலியாத்-இ-பார்சி-இ -காலிப், கலிபின் 11,000 கவிதை வரிகளின் தொகுப்பாகும். 1867-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டு அதில் காணாமல் போன சில பக்கங்கள் 1872-ம் ஆண்டு பதிப்பில் இணைக்கப்பட்டது. மவுலானா ஆசாத் தனிப்பட்ட முறையில் பாதுகாத்து வைத்திருந்த இந்த பதிப்பு புதுதில்லியில் உள்ள இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

1715-ம் ஆண்டு சுமர்சந்த் பாரசீக மொழியில் மொழி பெயர்த்து 1826-ல் நகலெடுக்கப்பட்ட ராமாயணக் கையெழுத்துப் பிரதி மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ராம்பூர் ராசா நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. 260 சித்திர விளக்கங்கள் கொண்ட இந்த கையெழுத்துப் பிரதிதான் மற்ற எந்த ராமாயண கையெழுத்துப் பிரதிகளை விடவும் அதிக எண்ணிக்கை கொண்டது.