Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஈ.டி. நவ் உலகளாவிய வணிக உச்சி மாநாடு 2026-ன் காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்

ஈ.டி. நவ்  உலகளாவிய வணிக உச்சி மாநாடு 2026-ன் காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்


புதுதில்லியில் நடைபெற்ற .டி நவ்  உலகளாவிய வணிக உச்சி மாநாடு 2026வன் காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், உலகளாவிய வணிக உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து, ‘ஒரு தசாப்த இடையூறு, ஒரு நூற்றாண்டு மாற்றம்என்ற கருப்பொருளில் குறிப்பிட்டார். 21-ம் நூற்றாண்டின் கடந்த தசாப்தம் உலகளாவிய தொற்றுநோய், பதற்றம், பல்வேறு பிராந்தியங்களில் போர்கள் மற்றும் உலகளாவிய சமநிலையை உலுக்கிய விநியோகச் சங்கிலி முறிவுகள் உள்ளிட்ட முன்னெப்போதும் கண்டிராத இடையூறுகளைக் கண்டது என்பதை அவர் விளக்கினார். நெருக்கடிகள் ஒரு நாட்டின் உண்மையான வலிமையை வெளிப்படுத்துகின்றன என்றும், இந்த இடையூறுகள் இருந்தபோதிலும், இந்தியாவின் தசாப்தம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, சிறந்த விநியோகம், ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது என்று  பெருமையுடன் குறிப்பிட்டார். இந்தியா உலகளாவிய வளர்ச்சியை உந்துவதோடு உலகப் பொருளாதாரத்தின் புதிய இயந்திரமாக வெளிப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில்கூறியிருப்பதாவது;

பல இடையூறுகளுக்கு மத்தியில், இந்தத் தசாப்தம் இந்தியாவிற்கு முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை கொடுத்துள்ளதுவலுவான விநியோகம் மற்றும் நமது ஜனநாயகத்தை வலுப்படுத்திய முயற்சிகளால் அது குறிக்கப்படுகிறது

“21-ம் நூற்றாண்டின் இந்தத் தசாப்தத்தில், இந்தியா சீர்திருத்த எக்ஸ்பிரஸில் சவாரி செய்கிறது

நாங்கள் பட்ஜெட்டை செலவினத்தை மையமாகக் கொண்டதாக மட்டுமல்லாமல், விளைவுகளை மையமாகக் கொண்டதாகவும் மாற்றியுள்ளோம்

கடந்த தசாப்தத்தில், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை வளர்ச்சியின் முக்கிய இயக்கிகளாக நாங்கள் கருதுகிறோம்

இன்றைய இந்தியா நம்பிக்கையுடனும் உலகளவில் போட்டியிடத் தயாராகவும் இருப்பதால் இன்று, உலகத்துடன் வர்த்தக ஒப்பந்தங்களில் நுழைகிறோம்

***

(Release ID: 2227939)

TV/PLV/RJ