Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உச்சநீதிமன்றத் தீர்ப்பு புதிய விடியலின் தொடக்கத்தைக் குறிக்கிறது: பிரதமர்


அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், இன்றைய தினம் (09.11.2019) இந்தியா மற்றும் இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு பொன் நாள் என்றும் தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி புதிய இந்தியாவை படைப்பதுடன், ஒவ்வொருவரின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

“இன்று, நவம்பர் 9 ஆம் தேதி கர்தார்பூர் வழித்தடம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் முயற்சிகள் அடங்கியுள்ளது. தற்போது, அயோத்தி வழக்கில் வெளிவந்துள்ள தீர்ப்பு, நவம்பர் 9 ஆம் தேதியான இன்று, அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதுடன், ஒருங்கிணைந்து வளர்ச்சியடைய வேண்டும் என்ற பாடத்தை நமக்கு உணர்த்துகிறது” என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் பொறுமையுடன் கேட்டறிந்து, ஒருமித்த தீர்ப்பை வழங்கியிருப்பதன் மூலம், அதன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

மேலும், “இன்றைய தீர்ப்பு மூலம், எத்தகைய கடினமான பிரச்சினைகளுக்கும், அரசியல் சாசன நெறிமுறைகளுக்கு உட்பட்டும், சட்ட விதிகளுக்கு உட்பட்டும் தீர்வு காண முடியும் என்பதை உச்சநீதிமன்றம் எடுத்துரைத்துள்ளது.

சற்று தாமதம் ஏற்பட்டாலும், நாம் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பின் மூலம் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இது அனைவரின் நலனுக்கும் உகந்தது.

ஒவ்வொரு சூழ்நிலையிலும், இந்திய அரசியல் சாசனம், இந்தியாவின் நீதித்துறை மீது நாம் வைத்துள்ள நம்பிக்கை தொடர்ந்து தடுமாற்றமற்றதாக இருக்க வேண்டும். இது மிகவும் அவசியம்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

ராமர் கோவில் கட்டுவது தொடர்பான முடிவை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், இந்த முடிவுக்கு நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பட்டு, தேசவளர்ச்சியில் மேலும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். நம் அனைவரிடையேயும் நல்லிணக்கம், சகோதரத்துவம், நட்புறவு, ஒற்றுமை மற்றும் அமைதி நிலவுவது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி நமது இலக்குகளையும், நோக்கங்களையும் அடைய பாடுபடுவோம் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

My address to the nation. https://t.co/xeMEuOyun0

— Narendra Modi (@narendramodi) November 9, 2019

My address to the nation. https://t.co/xeMEuOyun0

— Narendra Modi (@narendramodi) November 9, 2019

***