Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உஜ்ஜைன் சிம்ஹஸ்த் ஏற்பாடுகள் – பிரதமர் பாராட்டு


உஜ்ஜைன் சிம்ஹஸ்த்தில் பக்தர்களுக்காகவும் சுற்றுலா பயணிகளுக்காகவும் செய்துள்ள பிரமாண்ட ஏற்பாடுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டி உள்ளார். மத்திய பிரதேச முதல் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் பிரதமரை நேற்று புது தில்ல்லியில் சந்தித்தார். அதன் பிறகு, பிரதமர் தனது டுவிட்டர் வலைதளத்தில், சிம்ஹஸ்த்தில் தூய்மைக்காக எடுத்துக் கொண்டு உள்ள அக்கறையும், தொழில்நுட்ப பயன்பாடும் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச முதல் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகானுடன் அருமையான சந்திப்பு நடைபெற்றது. சிம்ஹஸ்த்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அவர் பேசினார்.

சிம்ஹஸ்த்தில் தொழில்நுட்ப பயன்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. நிலம் மற்றும் தண்ணீர் தூய்மைக்காக எடுத்துக் கொண்டு உள்ள கவனம் பாராட்டத்தக்கது.

சிம்ஹஸ்த்திற்கு செல்லும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் நமது வளமான வரலாறு மற்றும் சிறந்த கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில் கலாச்சார நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம் என்று கூறியுள்ளார்.