Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தரப்பிரதேசம் கிரேட்டர் நொய்டாவில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்துப் பிரதமர் கவலைத் தெரிவித்துள்ளார்


உத்தரப்பிரதேசம் கிரேட்டர் நொய்டாவில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு தமது இரங்கல்களைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:

உத்தரப்பிரதேசம் கிரேட்டர் நொய்டாவில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது அறிந்து கவலை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50,000-ம் வழங்கப்படும்.”  

***

(Release ID: 2314256)

SS/IR/RJ/SU