Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல்; விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கருணைத் தொகை அறிவித்தார்


உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“உத்தரப்பிரதேசத்தில் பரேலியில் நிகழ்ந்த பேருந்து விபத்து மிகுந்த துயரத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்,” என்று பிரதமர் கூறியுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து கருணைத் தொகையாக தலா ரூ.2 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 -ம் வழங்குவதாகவும் பிரதமர் அறிவித்துள்ளார்.