Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தர பிரதேச மாநிலம் எடாவில் நடைபெற்ற விபத்துக்கு பிரதமர் இரங்கல்


உத்தர பிரதேச மாநிலம் எடா நகரத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் இழப்பீடாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். இந்த இழப்பீடு பிரதமர் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.

“உத்தர பிரதேச மாநிலம் எடா நகரத்தில் ஏற்பட்ட விபத்தில் தனக்கு அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.”, என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.