Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உரி தாக்குதல் குறித்து இரங்கல் தெரிவிக்கஇலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா பிரதருடன் தொலைபேசி மூலம் பேச்சு


உரி தாக்குதல் குறித்து இரங்கல் தெரிவிக்கும் விதமாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

எல்லை தாண்டிய தீவிரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் மைத்திரிபால சிறிசேனா, உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மண்டலத்தில் உள்ள அனைத்து நாடுகளும் நிலையான ஒத்துழைப்பு தருவதற்கான தேவை குறித்து இரு தலைவர்களும் பேசினர் .

*****