Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பங்கேற்கும் மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து


இன்று நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பங்கேற்கும் மகளிர் கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்படுவதற்கு தனது வாழ்த்துகளை பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துக் கொண்டார்.

“நமது மகளிர் கிரிக்கெட் அணி, உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இன்று பங்கேற்கிறது. இதில், சிறப்பாக செயல்படுவதற்காக அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் 125 கோடி இந்தியர்களுடன் நானும் இணைகிறேன்.

இந்த அணிக்கு முன்னிலையில் இருந்து கேப்டன் மித்தாலி ராஜ் தலைமை வகிக்கிறார். விளையாட்டின் மீதான அவரது மென்மையான நிலைப்பாடு, நிச்சயமாக ஒட்டுமொத்த அணிக்கும் உதவும்.

ஸ்மிருதி மந்தனா-வுக்கு வாழ்த்துகள். அங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தட்டும். மேலும், அமைதியாகவும், நிதானத்துடனும் விளையாடட்டும்.

மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்காக பூனம் ரவுட்டுக்கும் இந்தியா வாழ்த்துகளை தெரிவிக்கிறது. அவரது ஆட்டம், நம் அனைவரையும் மிகவும் பெருமைப்பட வைக்கிறது.

ஹர்மன் பிரீத் கவுருக்கு ரசிகராக யார் இருக்க மாட்டார்கள்? அரையிறுதிப் போட்டியில் அவரது அற்புதமான ஆட்டம், எப்போதுமே நினைவில் கொள்ளப்படும். இன்று சிறப்பாக செயல்பட உங்களுக்கும் வாழ்த்துகள்.

இறுதிப்போட்டி சிறப்பாக அமைய, தீப்தி சர்மா-வுக்கும் வாழ்த்துகள். அணிக்கு சிறந்த மதிப்பை அவர் அளித்துள்ளார். அவரது ஆட்டம், பல்வேறு போட்டிகளின் சூழ்நிலையை மாற்றியமைத்துள்ளது.

அனுபவம் வாய்ந்த வேதா கிருஷ்ணமூர்த்தி, அணிக்கு நடுத்தர நிலையில் மிகவும் தேவையான நிலைத்தன்மையை அளித்து வருகிறார். இன்றைய ஆட்டத்துக்காக வாழ்த்துகள்.

விக்கெட் கீப்பராக சுஷ்மா வெர்மா, முக்கியப் பங்களிப்பை செய்து வருகிறார். அவரது கேட்ச்-கள், போட்டிகளில் வெற்றியை தேடித்தந்ததை நினைவுகூர்கிறேன்.

ஜூலன் கோஸ்வாமி, இந்தியாவுக்கு பெருமைத் தேடித் தந்துள்ளார். அவரது அற்புதமான பந்துவீச்சு, முக்கியமான சூழ்நிலைகளில் அணிக்கு உதவியுள்ளது. ஜுலனுக்கு வாழ்த்துகள்.

ஆல் ரவுண்டராக ஷிகா பாண்டே-வின் செயல்பாடுகள், அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாழ்த்துகள்.

பூனம் யாதவின் அற்புதமான பந்துவீச்சு, தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு கூட நெருக்கடியை ஏற்படுத்தும். வாழ்த்துகள்.

குறைவான ரன்களைக் கொடுத்து சிறப்பாக பந்துவீசுவதன் மூலம், அறியப்பட்டவர் ராஜேஸ்வரி கெய்க்வாட். அவருக்கு வாழ்த்துகள்,” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

***