பி.எம்.இந்தியா
உலக கோப்பை கிரிக்கெட் 2015ல் பங்கேற்க உள்ள சார்க் நாடுகள் தலைவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் திரு. அஷ்ரப்கானி, பிரதமர் திரு. ஷேக் ஷசினா, பிரதமர் நவாஸ் ஷெரிப், அதிபர் திரு. சிரிசேனா ஆகியோரிடம் உலக கோப்பை 2015 கிரிகெட் போட்டிகளுக்காக எனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளேன்.
உலக கோப்பையில் ஐந்து சார்க் நாடுகள் விளையாட உள்ளன. விளையாட்டை விளையாட்டாகக் கொண்டு மட்டுமில்லாமல் விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்தாக உலக கோப்பை அமையும்.
கிரிகெட் எங்கள் மண்டலத்தில் உள்ள மக்களை இணைத்து, நல்லெண்ணத்தை ஊக்குவிக்கிறது. சார்க் மண்டல விளையாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடி மண்டலத்திற்கு பெருமை சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.
சார்க் நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் வகையில், நமது வெளியுறவுத் துறை செயலர் சார்க் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.