Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக நுகர்வோர் உரிமை தினம் – நுகர்வோருக்கு பிரதமர் பாராட்டு; பணமில்லா பரிமாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்- நுகர்வோருக்கு பிரதமர் வேண்டுகோள்


உலக நுகர்வோர் உரிமை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நுகர்வோரை பாராட்டினார். பணமில்லா பரிமாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நுகர்வோருக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

“உலக நுகர்வோர் உரிமை தினத்தன்று நுகர்வோருக்கு எனது பாராட்டுகள். உங்களின் வாங்குதல் / கொள்முதல் சக்தியில் தான் நமது பொருளாதாரம் இயங்குகிறது.

நுகர்வோர் உரிமை மற்றும் அவர்களின் குறைகள் தீர்ப்பை உறுதி செய்வதில், இந்திய அரசின் திட்டங்கள் முன்னோடியாக விளங்குகிறது.

இந்த உலக நுகர்வோர் உரிமை தினத்தன்று, அனைத்து நுகர்வோரும் பணமில்லா பரிமாற்றத்தை ஏற்றுக்கொண்டு, ஊழல் மற்றும் கருப்புப் பணத்தை ஒழிக்கும் இயக்கத்தில் இணைய வேண்டும்” என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.