Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அர்ஜுன் எரிகைசிக்கு பிரதமர் வாழ்த்து


தோஹாவில் நடைபெற்ற சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே-வின் (FIDE) உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (31.12.2025) வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஃபிடே ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற சிறிது நேரத்திலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இது உலக செஸ் அரங்கில் இந்தியாவிற்கு மற்றொரு பெருமைமிக்க தருணமாகும்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

செஸ் போட்டியில் இந்தியாவின் முன்னேற்றங்கள் தொடர்கின்றன!

தோஹாவில் நடைபெற்ற ஃபிடே உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அர்ஜுன் எரிகைசிக்கு வாழ்த்துகள். சமீபத்தில் ஃபிடே ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து இந்தப் பதக்கத்தை அவர் வென்றுள்ளார். அவரது திறமை, பொறுமை, ஆர்வம் ஆகியவை எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. அவரது வெற்றிகள் நம் இளைஞர்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவருக்கு எனது வாழ்த்துகள்.

@ArjunErigaisi”

***

(Release ID: 2209983)

TV/PLM/KR