பி.எம்.இந்தியா
உஸ்பெகிஸ்தான் நாட்டில் தனது பயணத்திற்கு முன்னதாக, அந்நாட்டைச் சேர்ந்த இளம் நண்பர்களின் உற்சாகத்தைக் கண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். அவர்களது உற்சாகத்தை வெளிப்படுத்தும் காணொளிப் பதிவைப் பகிர்ந்துகொண்ட பிரதமர், அவர்கள் இந்தி மொழியில் மிக அழகாகத் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதைக் காண்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்று கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
உஸ்பெகிஸ்தான் நாட்டில் எனது பயணத்தைத் தொடங்கவிருக்கும் வேளையில், அந்நாட்டைச் சேர்ந்த இளம் நண்பர்களின் உற்சாகத்தை இந்தக் காணொ வாயிலாகக் காண்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
அவர்கள் இந்தி மொழியில், மிகச் சிறப்பாக இந்த காட்சியைப் பதிவு செய்திருப்பது மேலும் சிறப்பானதாக மாற்றுகிறது!
***
(Release ID: 2304530)
SS/SV/RJ