Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஊரக வளர்ச்சி துறை தொடர்பாக ஆப்பிரிக்க ஆசிய ஊரக வளர்ச்சி அமைப்புடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


ஊரக வளர்ச்சித் துறையில் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கான இந்தியா மற்றும் ஆப்பிரிக்க ஆசிய ஊரக வளர்ச்சி அமைப்பு (AARDO) ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.

2015­2017 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் AARDO உறுப்பு நாடுகளின் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்காக கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு மீட்சிறப்பு நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய பயிற்சிகள் அமைத்து வழங்கப்படும். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய நிறுவனம், வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய சபையின் கீழ் வரும் நிறுவனங்கள், இந்திய நிர்வாகவியல் நிறுவனங்கள் போன்றவை இந்த பயிற்சியை வழங்கும். இத்தகைய ஒவ்வொரு பயிற்சியும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு வழங்கப்படும். ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய நிறுவனம் வழங்கும் ஊரக மேம்பாட்டு நிர்வாக பட்டமேற்படிப்பு வகுப்பு ஓராண்டு காலத்திற்கு நடத்தப்படும்.

பின்னணி­

புதுதில்லியில் தலைமை இடத்தைப் பெற்றுள்ள AARDO ஒரு சுயேச்சையான நிறுவனமாகும். அரசுகளுக்கு இடையேயான இந்த அமைப்பு 1962­ல் நிறுவப்பட்டது. ஆப்பிரிக்க ஆசிய மண்டலத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இந்த நிறுவனம் நோக்கமாகக் கொண்டது. தாகம், பசி, எழுத்தறிவின்மை, நோய், ஏழ்மை ஆகியவற்றை இந்த மண்டலத்திலிருந்து அகற்றுவதை நோக்கி நிறுவனம் உழைக்கும். இந்தியா இந்த நிறுவனத்தின் அமைப்பு உறுப்பினர்களில் ஒருவர். இந்தியா உறுப்பினர் பங்களிப்பாக அமெரிக்க டாலர் 1,41,100 வழங்கி மிகப்பெரிய நிதி வழங்கும் நாடாக உள்ளது. இதுதவிர, இந்தியா 70 முற்றிலும் உதவித்தொகை வழங்கும் பயிற்சிக்ளையும் வழங்குகிறது. இந்த அமைப்புக்கு இந்திய தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவு திட்டத்தின் கீழ், மனிதவள மேம்பாட்டு பயிற்சிகளுக்கு இந்த உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன, தில்லியில் AARDO அமைப்புக்கு செயலகம் அமைக்க கட்டடம் ஒன்றையும் இந்தியா வழங்கியுள்ளது. இந்த கட்டடத்தை பராமரிப்பதற்காக குறிப்பிடத்தக்க அளவு நிதியுதவியையும் இந்தியா வழங்கிவருகிறது. AARDO அமைப்பு தற்போது ஆப்பிரிக்க ஆசிய மண்டலத்தைச் சேர்ந்த 31 நாடுகளை உறுப்பினர்களாகப் பெற்றுள்ளது.

2009 முதல் இந்தியா AARDO­க்கு கூடுதல் நிதியாக அமெரிக்க டாலர் 6,20,30 தொகையை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கிவருகிறது. உறுப்புநாடுகளின் நன்மைக்காக திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டங்களை AARDO அதிக அளவிலும் சிறப்பாகவும் நடத்த இந்த உதவி வழங்கப்படுகிறது.