பி.எம்.இந்தியா
7-வது இருதரப்பு கூட்டு இயக்கக் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்துள்ள எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சமே ஹசன் சவுக்ரி, புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
எகிப்து அதிபர் சிசியின் வாழ்த்துக்களை அவர் பிரதமர் மோடியிடம் தெரிவித்தார். பிரதமர் மோடி தமது வாழ்த்துக்களை அதிபர் சிசியிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்தியா – எகிப்து இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இருநாடுகளுக்கும் உள்ள உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர். உள்கட்டமைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு, இருநாட்டு மக்களுக்கிடையிலான உறவுகள் ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.
——
Mr. Sameh Shoukry, Foreign Minister of the Arab Republic of Egypt met PM @narendramodi in Delhi. pic.twitter.com/zT0W5spv0B
— PMO India (@PMOIndia) March 23, 2018