பி.எம்.இந்தியா
எரிசக்தி மேலாண்மை மற்றும் சேமிப்பு துறை சார்ந்த பல்வேறு சேவைகளை வழங்குவதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் கீழ் தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வரும் தேசிய உற்பத்திக் கழகம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளை-ஐ சேர்ந்த அல் எதிஹாட் எரிசக்தி சேவைகள் நிறுவனத்தின் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமயிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், தேசிய உற்பத்திக் கழகம் கீழ்கண்ட சேவைகளை வழங்கும்
அதேசமயம், இந்த திட்டங்களுக்கு ஏற்ப எதிஹாட் எரிசக்தி சேவைகள் நிறுவனம் கீழ்கண்ட சேவைகளை வழங்கும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தேசிய உற்பத்திக் கழகத்திற்கு மன்றத்திற்கு உயர் மதிப்பு வாய்ப்புகளை அளிக்கும். எரிசக்தி உருவாக்குதல், துபாய் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் உள்ள பிற உறுப்பினர் நாடுகளில் எரிசக்தி சேமிப்பு துறையில் அமைப்பு சார் நடவடிக்கையை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். தேசிய உற்பத்திக் கழகத்திற்கு அங்கீகாரம் கிடைக்கவும் மிகவேகமாக மாறிவரும் சர்வதேச வணிக சூழ்நிலையில் தேசிய உற்பத்தித்திறன் மன்றத்தின் கொள்திறன் மற்றும் திறமைகளை மேலும் வலுப்படுத்தவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பயன்படும். சர்வதேச ஒத்துழைப்பு பங்காளர்களுடனான ஒப்பந்தங்களுக்கு முன்னோடியாக அமையும். மேலும், சர்வதேச அரங்கில் தேசிய உற்பத்திக் கழகத்தின் நிலையை இது உயர்த்தும். வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் உறுப்பு நாடுகளில் தேசிய உற்பத்திக் கழகத்தை ஊக்குவிக்கவும் எரிசக்தி துறையில் தேசிய உற்பத்திக் கழகத்தின் வர்த்தகத்தை உயர்த்தவும் இந்த புரிந்துணர்வு உதவி புரியும்.
****