Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எழுத்தாளர், நகைச்சுவை எழுத்தாளர், நாடக கதாசிரியர் திரு தாரக் மேத்தா மறைவு – பிரதமர் இரங்கல்


இந்திய எழுத்தாளர், நகைச்சுவை எழுத்தாளர், நாடக கதாசிரியர் திரு தாரக் மேத்தா மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“பிரபல நாடக ஆசிரியர் மற்றும் நகைச்சுவை எழுத்தாளர் தாரக் மேத்தா அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலி. அவர் தன் வாழ்நாள் முழுவதும் நையாண்டி கவிதைகள் எழுதியவர். தன் பேனாவை ஒருபோதும் கீழே வைக்கவில்லை.

திரு. தாரக் மேத்தாவை சந்தித்து பேசும் பாக்கியம் பலமுறை எனக்கு கிடைத்தது. அவர் சமீபத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற போதும் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

திரு. தாரக் மேத்தா அவர்களின் எழுத்துகள் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்பதை சித்தரித்த்து. தன் எழுத்துகள் மூலம் பலரது இதயங்களிலும் இடம்பிடித்தவர்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.