Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐஐடி தில்லியின் 57-வது பட்டமளிப்பு விழாவின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

ஐஐடி தில்லியின் 57-வது பட்டமளிப்பு விழாவின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின்  (ஐஐடி) 57-வது பட்டமளிப்பு விழாவின் சிறப்பம்சங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துகொண்டார். இந்த விழா ஏற்படுத்திய ஆழமான உணர்வுபூர்வமான தாக்கத்தை எடுத்துரைத்த பிரதமர், வளாகத்தில் நிலவிய துடிப்பான மற்றும் கனவுகள் நிறைந்த சூழலைக் குறிப்பிட்டார். கோவிட் பெருந்தொற்று காலத்தில் காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதை நினைவுகூர்ந்த அவர், பட்டம் பெறும் மாணவர்களிடையே நேரில் கலந்துகொள்வதில் தாம் அடைந்த மனநிறைவை வெளிப்படுத்தினார். “இன்று இந்த வளாகத்தில் உங்களுடன் இந்த அற்புதமான அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது எனக்கும் மிகவும் சிறப்பான தருணமாகும்,” என்று திரு மோடி குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர் பதிவுகளில் பிரதமர் தெரிவித்ததாவது:

ஐஐடி தில்லியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் பட்டதாரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்கள் பெரிய கனவுகளைக் காணவும், சவால்களை எதிர்கொள்ளவும், வளர்ச்சியடைந்த இந்தியாவின் உருவாக்கத்தில் பங்களிக்கவும் வாழ்த்துகிறேன்.

@iitdelhi”

அறிமுக நிகழ்வு முதல், பட்டமளிப்பு விழா வரையிலான அந்தச் சிறப்பான பயணம் குறித்து ஐஐடி தில்லி விழாவில் பேசினேன். விடுதி நினைவுகள் மற்றும்  நட்புகள் முதல் வளாகத்தில் நண்பர்களுடன் பொழுதைக் கழித்த விருப்பமான இடங்கள் வரை அனைத்தும் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கக்கூடிய அனுபவங்களாகும்.

நமது இளம் பட்டதாரிகள், வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கும் வேளையில், இந்தப் பயணத்தில் உடன் பயணித்த அனைவரையும்நண்பர்கள், ஆசிரியர்கள், வழிகாட்டிகள் மற்றும் உறுதுணையாக இருந்த பணியாளர்களை நினைவில் கொண்டு போற்றுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டேன். வாழ்க்கை அவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும், அவர்கள் எப்போதும் தங்கள் கல்வி நிறுவனத்துடனான பிணைப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

@iitdelhi”

முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் மாறிவரும் உலகிற்குத் தயாராவது அவசியமாகிறது. பல்வேறு தொழில்துறைகள், வாழ்க்கைத் தொழில்கள் உள்ளிட்டவற்றில் தொழில்நுட்பம் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

சவால்கள் வரத்தான் செய்யும்; ஆனால், புதிய தீர்வுகளைக் கண்டறியும் துணிச்சல் கொண்டவர்கள் அத்தகைய சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவார்கள்!”

ஐஐடி தில்லி மாணவர்களிடம் நான் கூறியவற்றில் ஒன்றுதேர்வுகளுக்கு ஒரு பாடத்திட்டம் உண்டு, ஆனால் வாழ்க்கைக்கு அப்படி எதுவும் இல்லை. வாழ்க்கை பெரும்பாலும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது!

முந்தைய தலைமுறை ஒன்று, இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டது. இன்றைய இளைஞர்களின் முன்னால் உள்ள பொறுப்பு வேறுபட்டது என்றாலும், அதுவும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது. பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் தன்னிறைவு அடைவது முதல் தொழில்சார் வலிமையை வளர்ப்பது வரை, வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை அடைவதில் அவர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.”

என் வம்சாவளியிலேயே ராக்கெட், சிப் மற்றும் ட்ரோன் ஆகியவற்றை உருவாக்கிய முதல் நபர்…. என்று பல இளைஞர்கள் சொல்கிறார்கள்…!”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296677&reg=3&lang=1

***

TV/RB/RJ