Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐக்கிய நாடுகளின் அஞ்சல் நிர்வாகம் மற்றும் இந்திய அஞ்சல் துறை கூட்டாக இணைந்து வெளியிடவுள்ள பெண்களுக்காக ஆண்கள் என்ற அஞ்சல் தலை


ஐ. நா. சபையின் பெண்களுக்காக ஆண்கள் என்ற அஞ்சல்தலையை கூட்டாக வெளியிடுவது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இவ்வாறு கூட்டாக அஞ்சல் தலையை வெளியிடுவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் இந்திய அஞ்சல் துறையும் ஐக்கிய நாடுகள் சபையின் அஞ்சல் நிர்வாகமும் கையெழுத்திட்டிருந்தன.

இந்த கூட்டு வெளியீட்டிற்கென சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி 20 அஞ்சல் தலைகள் அடங்கிய தாள் மற்றும் இரு அஞ்சல் தலைகள் அடங்கிய குறுந்தாள் வடிவத்தில் இந்த அஞ்சல் தலைகள் அச்சிடப்பட்டிருந்தன.

ஐ. நா. சபையின் பெண்களுக்கான ஆண்கள் என்ற பிரச்சாரமானது பாலின சமத்துவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஓர் இயக்கமாகும். சமூக ரீதியான அளவில் அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் மனித குலத்தில் ஒரு பாதியை சேர்ந்தவர்களை மற்றொரு பாதியாக உள்ளவர்களுக்கு ஆதரவாக இணைப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். இந்தக் கூட்டு வெளியீடானது உலகம் முழுவதிலும் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டதாகும். சமீப காலமாக இந்திய அரசு முன்னெடுத்து வரும் பாலின சமத்துவம் என்ற மகத்தான குறிக்கோளை வளர்த்தெடுப்பதாகவும் இந்த முயற்சி அமையும். எனவே, மார்ச் 8, 2016 அன்று கூட்டாக அஞ்சல் தலையை வெளியிட்டு சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடுவது என்ற ஒப்பந்தத்தை இந்திய அஞ்சல் துறையும் ஐ. நா. சபையின் அஞ்சல் நிர்வாகமும் மேற்கொண்டன.