பி.எம்.இந்தியா
ஐதராபாத்தில் சர்வதேச செயல்பாட்டு கடலியல் பயிற்சி மையத்தை உருவாக்குவதற்கு யுனெஸ்கோவுடன் (UNESCO) ஒப்பந்தம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஐதராபாத்தில் பிரிவு – 2 மையமாக சர்வதேச செயல்பாட்டு கடலியல் பயிற்சி மையத்தை உருவாக்குவதற்கு யுனெஸ்கோ (UNESCO) உடன் ஒப்பந்தம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
யுனெஸ்கோ (UNESCO) கட்டமைப்பு வரம்புக்கு உள்பட்ட இந்தியப் பெருங்கடல் விளிம்பு எல்லை (IOR), இந்தியா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் எல்லையை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகள், சிறிய தீவு நாடுகளுக்கு திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி அளிப்பதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்படுகிறது. மீனவர்களுக்கும், பேரழிவு மேலாண்மை, கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், கடலோர மாநிலங்கள், கடற்படை, கடலோரக் காவல் படை, சுற்றுச்சூழல் துறை, கரையோர தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு தரப்பினருக்கு தங்களது தினசரி செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும் வகையில் தகவல் சேவைகளை அளிப்பதற்கு ஏற்ப முறைப்படியான கடலியல் ஆய்வுகளை மேற்கொள்வது இந்த மையத்தின் செயல்பாடாக இருக்கும்.
திறன் வளர்ப்பு மற்றும் பயிற்சி, அறிவு பகிர்தல் மற்றும் தகவல் பரிமாற்றம் போன்றவற்றில் மத்திய அரசு உதவி அளிக்கும். எனவே யுனெஸ்கோ (UNESCO) மற்றும் அரசுகளிடை கடலியல் ஆணையத்துக்கு மதிப்புமிக்க ஆதாரவள அமைப்பாக இரு இருக்கும். யுனெஸ்கோ (UNESCO)-வின் செயல்பாடுகள் வெளிப்படையாக தெரிவது மற்றும் அதன் விளைவுகளை மேம்படுத்தும் வகையில் இது அமையும்.
யுனெஸ்கோ (UNESCO) பிரிவு 2 மையத்தை உருவாக்குவது, இந்தியப் பெருங்கடலில் இந்தியா முதன்மை நாடாக உருவாவதற்கான வாய்ப்பாக அமையும். இதன் மூலம் இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள தெற்காசிய மற்றும் ஆப்பிரிக்க அரசுகள் உள்பட, இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகளுடன் பங்கேற்பு மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பு உருவாக்குதலுக்கும் இது உதவியாக இருக்கும். கடல்வளம் மற்றும் கடலோர நீடித்த பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பாக தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை திறன்களை உருவாக்க வேண்டிய அவசியத்தை மேம்படுத்துவது என்ற உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இது இருக்கும். கடல்வள இயற்கை பேரழிவுகளை சிறப்பாக சமாளிப்பதற்கும், இந்தப் பிராந்தியத்தை தயார்படுத்துவதற்கும் இது உதவும். மையத்தின் கடமையாக உள்ள பூகோள ரீதியிலான கடல்வள அறிவியல் ஆய்வுத் திறனை கட்டமைப்பது தொடர்பாக நீடித்த நிலை மேம்பாட்டு இலக்கு -14 (SDG14) -ஐ எட்டுவதற்கும் மத்திய அரசு பங்களிப்பு செய்யும். வளரும் நிலையில் உள்ள சிறிய தீவு அரசுகளையும், குறைந்த வளர்ச்சியுள்ள நாடுகளையும் ஆதரிக்கும் பொறுப்பை நிறைவு செய்வதாகவும் இது இருக்கும்.
மாணவர்கள் மற்றும் இதர பங்கேற்பாளர்களின் திறன்களை மேம்படுத்துவதை இந்த C2C நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தியாவுக்குள்ளும் வெளியிலும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும். C2C உருவாக்கப்படுவதால், இதைச் சார்ந்த துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டு, இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த மையம் இந்திய கடல்வள தகவல் சேவைகள் (INCOIS), ஐதராபாத், -ல் உள்ள அதிநவீன வசதிகளைக் கொண்டு இப்போது செயல்பட்டு வருகிறது. இதுவரையில் இந்தியாவில் இருந்து 576 மற்றும் 34 வேறு நாடுகளில் இருந்து 105 பேர் உள்பட 681 விஞ்ஞானிகள் செயல்பாட்டு கடல்வளம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த மையத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். கட்டடம் மற்றும் பயிற்சி விடுதி போன்ற இதர கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரமான புத்திகூர்மையாளர்களயும், பயிற்சியாளர்களையும் உலகெங்கும் இருந்து வரவழைத்து, நீண்டகால பாடத் திட்டங்களை (3 – 9 மாதங்கள்) உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
*****