Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐந்தாவது இளவரசர் ரஹீம் ஆகா கான், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்


ஆகா கான் மேம்பாட்டு கட்டமைப்பின் (ஏகேடிஎன்) தலைவரான ஐந்தாவது இளவரசர் ரஹீம் ஆகா கான், இன்று (10.09.2026) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இந்தியாவில், குறிப்பாக நிலையான நகர்ப்புற மேம்பாடு, நீர் பாதுகாப்பு, சுகாதாரம், கிராமப்புற சுகாதாரம், இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு, பெண்கள் மேம்பாடு ஆகிய துறைகளில் ஏகேடிஎன் ஆற்றும் நீண்டகாலப் பங்களிப்புகளைப் பிரதமர் பாராட்டினார்.

நாடு முழுவதும் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை மீட்டெடுத்துப் புனரமைப்பதன் மூலம் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் ஏகேடிஎன் மேற்கொண்டு வரும் முன்னோடி முயற்சிகளையும் பிரதமர் பாராட்டினார்.

ஆகா கான், இந்தியாவின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் ஏகேடிஎன்-ன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இந்தியாவின் மாற்றத்தை உருவாக்கும் வளர்ச்சி முன்முயற்சிகளை அவர் பாராட்டியதோடு, மனித நலனை மேம்படுத்துவதில் புத்தாக்கத்தின் பங்கு குறித்த தனது கண்ணோட்டங்களையும் பகிர்ந்துகொண்டார்.

***

(Release ID: 2308835)

TV/PLM/RJ