Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஜி செயற்கைக்கோள் ஏவப்பட்டதை பிரதமர் பார்வையிட்டார்; இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஜி செயற்கைக்கோள்  ஏவப்பட்டதை பிரதமர் பார்வையிட்டார்; இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு


ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஜி என்ற வழிகாட்டி செயற்கைக்கோள், வெற்றிகரமாக இன்று விண்ணில் ஏவப்பட்டதை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புது தில்லியில் பார்வையிட்டார். பி.எஸ்.எல்.வி. சி33 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்று பகல் 12.50 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்ட சிலநொடிகளில் காணொளி கலந்தாய்வு மூலம் உரையாடிய பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

வான்வெளி ஆராய்ச்சியில், மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பல சாதனைகளை இந்திய விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர்.

“இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது மூலம் நமது தொழில்நுட்ப உதவியுடன் நமது வளர்ச்சி பாதையை நாமே உருவாக்கலாம். இது நாட்டு மக்களுக்கு இந்திய விஞ்ஞானிகள் அளித்துள்ள விலைமதிப்பில்லா பரிசு” என்று பிரதமர் கூறினார். இது இந்திய நாட்டுக்கு மட்டும் அல்லாமல் சார்க் நாடுகளுக்கும் பயனுள்ளதாக அமையும்.

இந்த வழிகாட்டி செயற்கைக்கோள் “நாவிக் – செயற்கைக்கோள்கள் தொகுப்புகளுடனான வழிகாட்டி முறை“ என்று அழைக்கப்படும். இது “இந்தியாவில் தயாரிப்போம்” மற்றும் “இந்தியர்களுக்காக தயாரிப்போம்” முயற்சிகளுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

***