பி.எம்.இந்தியா
ஒன்டாரியோ பிரதமர் திருமதி. கத்லீன் வைனே மற்றும் கனடாவின் மாகாணமான இளவரசர் எட்வர்ட் தீவின் பிரதமர் திரு. எச். வாடே மச்லாச்லன் ஆகியோர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை பிப்ரவரி 4, 2016 அன்று சந்தித்து பேசினர்.
உற்பத்தி, திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நகர்ப்புறங்கள் நவீனமயமாக்கல், கழிவு மேலாண்மை, கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய அரசு எடுத்துள்ள முயற்சிகளை, ஒன்டாரியோ பிரதமரும் இளவரசர் எட்வர்ட் தீவின் பிரதமரும் வெகுவாக பாராட்டினர். கடந்த ஆண்டு முதல் கனடா ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் இந்தியா மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். நாளை மற்றும் மறுநாள் புது தில்லியில் நடைபெறும் இந்த முதலீடு மாநாட்டில் கனடா நாடு அளித்துள்ள வலுவான பங்கேற்பு இதனை உறுதி செய்துள்ளது.
கனடா நாட்டுடனான உறவிற்கு இந்தியா பெரும் முக்கியத்துவம் அளித்து வருவதாக பிரதமர் கூறினார். 42 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக 2015 ஆண்டு ஏப்ரல் மாதம் கனடா நாட்டிற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட அரசு பயணம் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் உள்ள இருதரப்பு உறவினை மேலும் வலுவடைய செய்துள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ருடியாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவிற்கு அவர் மேற்கொள்ளவுள்ள பயணம் இரு நாட்டின் உறவினை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Ms. Kathleen Wynne, Premier of Ontario met PM @narendramodi. pic.twitter.com/gFQi7ATlPc
— PMO India (@PMOIndia) February 3, 2016