Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒற்றுமை, பரஸ்பர ஒத்துழைப்பு, கூட்டு உறுதிப்பாடு ஆகியவற்றின் வலிமை குறித்து எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


ஒற்றுமை, பரஸ்பர ஒத்துழைப்பு என்ற இழைகளால் குடிமக்கள் இணைக்கப்படும் போது நாட்டின் வலிமை பலமடங்கு பெருகுவதாக குறிப்பிடும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்திய மக்களின் இந்த கூட்டு உறுதிப்பாடு மூலம் நாடு தொடர்ந்து வளர்ச்சியின் புதிய உச்சத்தை அடைவதாக திரு மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

மரத்துண்டுகள் தனியாக உள்ள போது, தங்கள் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்த இயலாது, ஆனால் அவை ஒன்றாக சேர்க்கப்பட்டு பிரகாசமாக எரிந்து ஒளியையும், வெப்பத்தையும் அளிப்பது போல, ஒரு நாட்டின் முன்னேற்றம், வளமை, வலிமை ஆகியவை அம்மக்களின் ஒற்றுமை, பரஸ்பர ஒத்துழைப்பு, கூட்டு உறுதிப்பாட்டை சார்ந்துள்ளது.   

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268203&reg=3&lang=1

***

SS/IR/RJ/KR