Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சாரநாத் இடம்பெற்றதற்குப் பிரதமர் மகிழ்ச்சி


உத்தரப் பிரதேசத்தில் உள்ள சாரநாத், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய விஷயம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (25.07.2026) தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தமது மகிழ்ச்சியையும் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஞானம், கருணை, நல்லிணக்கம் ஆகிய காலத்தால் அழியாத செய்திகள் உலகிற்கு உத்வேகம் அளிக்கும் புத்த பகவானுடன் சாரநாத்திற்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அங்கீகாரம் இந்தியாவின் ஆழமான நாகரிக, ஆன்மீகப் பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது என்று திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார். இது உலகெங்கிலும், மேலும் அதிகமான மக்களை சாரநாத்திற்கு வந்து புத்த பகவானின் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக்கொள்ள ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஒவ்வொரு இந்தியருக்கும் இது ஒரு பெருமைக்குரிய தருணம்!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சாரநாத், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

சாரநாத், புத்த பகவானுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. அவரது ஞானம், கருணை, நல்லிணக்கம் ஆகிய காலத்தால் அழியாத செய்திகள் உலகிற்கு உத்வேகம் அளிக்கின்றன.

இந்த அங்கீகாரம் இந்தியாவின் ஆழமான நாகரிக, ஆன்மீகப் பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது. இது உலகெங்கிலும் உள்ள மேலும் அதிகமான மக்களை சாரநாத்திற்கு வந்து புத்த பகவானின் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக்கொள்ள ஊக்குவிக்கும்.”

***

(Release ID: 2289424)

TV/PLM/RJ