பி.எம்.இந்தியா
இந்தியா – ஓமன் நட்புறவுக்கான சிறந்த பங்களிப்பு மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்திற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருதை, ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் வழங்கினார்.
இவ்விருதை இருநாடுகளுக்கு இடையேயான பழங்கால நட்புறவுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் கூறியுள்ளார். இது இந்தியாவின் 1.4 பில்லியன் மக்கள் மற்றும் ஓமன் மக்கள் இடையேயான அன்பிற்கும், பாசத்திற்குமான மரியாதை என்று குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் 70 ஆண்டுகளை நிறைவு செய்த சூழலில், ஓமன் பயணத்தின் போது பிரதமருக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டது. இது அந்த நிகழ்ச்சிக்கும், உத்தி சார்ந்த கூட்டாண்மைக்கும் சிறப்பு முக்கியத்துவத்தை அளித்தது.
1970-ம் ஆண்டு மன்னர் கபூஸ் பின் சயித் நிறுவிய ஆர்டர் ஆஃப் ஓமன் விருது, பொது வாழ்விலும், இருதரப்பு உறவுகளுக்கும் ஆற்றிய பங்களிப்பை போற்றி, தேர்ந்தெடுக்கப்படும் உலகத் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206032®=3&lang=1
***
AD/IR/RK/SE