பி.எம்.இந்தியா
கஜகஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தானுடன் விளையாட்டுத் துறையில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்த கடந்த ஜூலை, 2015-ல் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்தியா – கஜகஸ்தான் மற்றும் இந்தியா – துர்க்மேனிஸ்தான் இடையேயான இந்த இருதரப்பு பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம் விளையாட்டு துறை, விளையாட்டு துறை மருத்துவம் மற்றும் பயிற்சி நுட்பங்களில் அதித அறிவினையும் நிபுணத்துவத்தையும் பெற முடியும். இதன் மூலம் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட முடியும்.