Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கடற்படையின் ஐ,என்,எஸ், கல்வாரி நீர் முழ்கிக் கப்பலைப் பிரதமர் நாளை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்


மும்பையில் நாளை கடற்படையின் ஐ.என்.எஸ். கல்வாரி நீர் முழ்கிக் கப்பலை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

ஐ.என்.எஸ். கல்வாரி டீசல் – மின்சாரத்தில் இயங்கும் தாக்குதல் நீர்முழ்கி கப்பலாகும். இந்தக் கப்பலை மசாகான் துறைமுகக் கப்பல் கட்டும் நிறுவனம் இந்திய கடற்படைக்காக உருவாக்கியது. இந்திய கடற்படையில் சேர உள்ள ஆறு இத்தகைய நீர்முழ்கி கப்பல்களில் இது முதலாவதாகும். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற திட்டத்தின் குறிப்பிடத் தக்க வெற்றியை இது உணர்த்துகிறது. இந்தக் கப்பல் கட்டும் திட்டம் பிரான்ஸ் ஒத்துழைப்புடைன் மேற்கொள்ளப்படுகிறது.

மும்பை கடற்படை துறைமுகத்தில் இந்த நீர்முழ்கிக் கப்பலை பாதுகாப்பு அமைச்சர், மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய பிரமுகர்கள், கப்பல் படையின் முதுநிலை அதிகாரிகள் முன்னிலையில் பிரதமர் அர்பணித்து வைக்கிறார். நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர், இந்த நீர்முழ்கிக் கப்பலுக்கு சென்று பார்ப்பார்.

*****