பி.எம்.இந்தியா
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை பயணம் மேற்கொள்ள உள்ளார்.
புஜ் நகருக்கு வருகை தரும் செலும் பிரதமர் , குஜராத் முதல் அமைச்சர் திருமதி ஆனந்தி பென் பட்டேலை சந்தித்து லண்டனின் முன்னணி சட்ட அமைப்பான இன்னர் டெம்பிள் வழங்கிய வழங்கிய ஷ்யாம்ஜி கிருஷ்ணா வர்மாவின் மரணத்திற்குப் பிந்தைய மறு அங்கீகாரச் சான்றிதழை ஒப்படைக்க உள்ளார். பிரதமர் நவம்பர் 2015ல் இங்கிலாந்த் பயணத்தின் போது , லண்டலில் இந்த சான்றிதழை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு தோர்டோ செல்லும் பிரதமர், டிசம்பர் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை காவல் துறை தலைமை இயக்குநர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.