பி.எம்.இந்தியா
கட்ச் சமூகத்தினர் கொண்டாடும் புத்தாண்டு தினமான ஆஷாதி பிஜ் நன்னாளை முன்னிட்டு, இந்தியாவிலும், உலகம் முழுவதும் வசிக்கும் அனைத்து கட்ச் சமூகத்தின் சகோதர, சகோதரிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பரந்த கடலில் மீன்கள் செழித்து வாழ்வதைப் போலவே, உலகம் முழுவதும் கட்ச் சமூக மக்களும் செழித்து விளங்குவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, கட்ச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர் எங்கு வசித்தாலும், அங்கு ஒவ்வொரு நாளும் அந்த சமூகத்தின் கலாச்சார சாராம்சம் உயிர்ப்புடன் திகழ்கிறது என்றும் கூறினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285473®=3&lang=1
****
TV/VK/RJ