பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் 2016 ஏப்ரல் 1 அன்று கனடா நாட்டின் பிரதமர் திரு. ஜஸ்டின் ட்ரூடோ அவர்களை வாஷிங்டன் நகரில் நடைபெற்ற அணுஆயுத பாதுகாப்பு உச்சிமாநாட்டிற்கு இடையே சந்தித்துப் பேசினார்.
திரு. ட்ரூடோ பிரதமராகப் பதவியேற்ற பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் புதியதொரு உற்சாகமும் வேகமும் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இந்த உறவை பொருளாதாரத் துறையிலும் மேலும் விரிவாக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு கனடாவிற்கு சென்றிருந்தபோது, அங்குள்ள ஓய்வூதிய நிதிகளுக்கான தலைவர்களை சந்தித்ததை நினவு கூர்ந்த திரு. மோடி, இந்த நிதி நிறுவனங்களில் சில தற்போது இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றன என்பதையும் குறிப்பிட்டார்.
முதல் நாள் இரவு நடைபெற்ற விருந்தின்போது பிரதமர் மோடி தலையிட்டுப் பேசியதை கனடா பிரதமர் பாராட்டினார். அணுஆயுதப் பரவலை தடுப்பதற்கான முயற்சிகளில் கனடாவும் இந்தியாவும் முன்னோடிகளாக இருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மறுசுழற்சி மின்சக்தி குறித்து இந்தியா தீவிரமாக உள்ளது என்றும் பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டார். ஸ்மார்ட் சிட்டி திட்டம், நகர்ப்புற கட்டமைப்பு, திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் கனடா தனது செயல்பாட்டை மேலும் ஆழமாக இந்தியாவில் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஹைட்ரோ கார்பன் துறையில் (பெட்ரோலிய துரப்பணத் துறையில்) இந்தியாவின் முற்போக்கான கொள்கையை அவர் சுட்டிக் காட்டியதோடு, நிலக்கரியை வாயுமயமாக்குதல் மற்றும் நிலக்கரி சுரங்கப் பணிகள் ஆகிய துறைகளில் கனடாவின் ஒத்துழைப்பையும் அவர் கோரினார்.
இந்தியாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை பிரதமர் ட்ரூடோ ஏற்றுக் கொண்டார்.
பிரதமர் மோடி அவர்கள் இங்கிலாந்து பிரதமர் திரு. டேவிட் கேமரூனையும் சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களுமே கடந்த ஆண்டு திரு. நரேந்திர மோடி மேற்கொண்ட இங்கிலாந்து விஜயத்தை நினைவு கூர்ந்தனர். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மேலும் செழுமையாகவும் ஆழமாகவும் மாறியுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். பாதுகாப்புத் துறையிலான ஒத்துழைப்பு குறித்து நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தியாவில் உற்பத்தி செய் என்ற இந்தியாவின் முன்முயற்சியில், குறிப்பாக பாதுகாப்பு துறையில், இங்கிலாந்து பங்குதாரராக இருக்க முடியும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். விசா குறித்த விஷயமும் இந்த கலந்துரையாடலின்போது விவாதத்திற்கு வந்தது.
Canadian connect...today's meetings commence with an interaction with Canada's PM @JustinTrudeau. Both PMs discuss India-Canada relations.
— PMO India (@PMOIndia) April 1, 2016
Enhancing a vibrant partnership...PM @narendramodi & PM @David_Cameron talk India-UK ties. @Number10gov pic.twitter.com/P4a1BWAftt
— PMO India (@PMOIndia) April 1, 2016
A Summit that has brought together several nations to discuss a subject of great importance. pic.twitter.com/I4jPxvOZFc
— PMO India (@PMOIndia) April 1, 2016
NSS is about a commitment to making our world safer & creating a better tomorrow for future… https://t.co/C52c4bBCHd
— Narendra Modi (@narendramodi) April 1, 2016
There have been enriching interactions and discussions on Nuclear Security during #NSS2016. pic.twitter.com/7ZXmwojfBn
— Narendra Modi (@narendramodi) April 1, 2016
Was indeed wonderful to meet you again @JustinTrudeau. The new energy & dynamism in India-Canada ties is gladdening. https://t.co/tWTKmmHleJ
— Narendra Modi (@narendramodi) April 1, 2016
My meeting with PM @David_Cameron focused on defence cooperation, @makeinindia & other key issues. pic.twitter.com/zFENJehD4U
— Narendra Modi (@narendramodi) April 1, 2016