Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காகிதமில்லா உச்சநீதிமன்றத்தை உருவாக்கும் முயற்சியில் எடுத்து வைக்கும் முதல் அடியாக டிஜிட்டல் முறையில் மனு தாக்கல் செய்தல் குறித்த அறிமுக நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

காகிதமில்லா உச்சநீதிமன்றத்தை உருவாக்கும் முயற்சியில் எடுத்து வைக்கும் முதல் அடியாக டிஜிட்டல் முறையில் மனு தாக்கல் செய்தல் குறித்த அறிமுக நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு


பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று, காகிதமில்லா உச்சநீதிமன்றத்தை உருவாக்கும் முயற்சியில் எடுத்து வைக்கும் ஒரு அடியாக – டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யும் முறையினை அறிமுகப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்ற வலைதளத்தில், ஒருங்கிணைந்த வழக்கு மேலாண்மை தகவல் அமைப்பை பதிவேற்றம் செய்தார்.

நிகழ்ச்சியில் பேசிய இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு.நீதியரசர் ஜெ.எஸ்.கேஹர், இந்த ஆண்டு ஏப்ரல் 2 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நூற்றி ஐம்பதாவது விழா கொண்டாட்டங்களை நினைவுக் கூர்ந்தார். அன்றைய தினம் பிரதமர் திரு. நரேந்திர மோடி, நீதிமன்றப் பணிகளை எளிதாக்கும் வகையில் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது குறித்து வலுவாக எடுத்துரைத்தார் என்றார் அவர். டிஜிட்டல் முறையில் விண்ணப்பங்களை தாக்கல் செய்வதன் பயன்கள் குறித்து விவரித்த இந்திய தலைமை நீதிபதி, இந்த முனைப்பானது நீதிமன்ற அமைப்புகளில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்காக எடுத்துவைத்துள்ள மிகப் பெரிய அடியாகும் என்றார்.

நீதிமன்றத்தில் டிஜிட்டல் மூலம் விண்ணப்பம் தாக்கல் குறித்து விளக்ககாட்சியின் மூலம் எடுத்துரைத்த திரு.நீதியரசர் கான்வில்கர், இந்த புதிய முயற்சி “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வொம்” என்பதற்கு எடுத்துக்காடாக அமையும் என்றார்.

மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத், இந்த டிஜிட்டல் முயற்சிக்காக உச்சநீதிமன்றத்தை பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பங்கேற்றவர்களுக்கு புத்த பவுர்ணமியையொட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர் இன்றைய தினம் – 10 மே – 1857-ம் ஆண்டு சுதந்திரத்திற்கான முதல் யுத்த தொடக்கத்தின் ஆண்டு நினைவை குறிக்கும் தினம் என்பதை நினைவுக் கூர்ந்தார்.

பிரதமர், ஏப்ரல் 2 அன்று அலகாபாத்தில், உயர்நிலை நீதிமன்றங்கள் விடுமுறை காலத்தின்போது சில நாட்கள் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற இந்திய தலைமை நீதிபதியின் வேண்டுகோளை நினைவு கூர்ந்தார். அவர், அந்த வேண்டுகோள் தூண்டுகோலாக அமைந்துள்ளதாகவும், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களிலிருந்து உற்சாகப்படக்கூடிய செய்திகளை கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார். அவர், இந்த உணர்வு நேர்மறையான மாற்றங்களை கொண்டு வந்துள்ளதோடு, பொறுப்புணர்வையும் உருவாக்கியுள்ளது என்றார். அவர், இது சாதாரண மக்களிடையே நம்பிக்கையை உருவாக்கியுள்ளது, அதுவே ‘புதிய இந்தியா’விற்கான முக்கியத்துவமாகும்.

பிரதமர், தொழில்நுட்பம் கடந்தகால வன்பொருளுக்கு இணையாக உள்ளது என்றார். ஆகையால், மனநிலையில் மாற்றத்தை கொண்டு வருவது முக்கியமாகும். அவர், ஒரு நிறுவனத்திற்குள் தொழில்நுட்பத்தை கூட்டாக ஏற்க வேண்டும் என்றார். அவர் காகிதமில்லா முயற்சிகள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், வருங்கால சந்ததியினருக்காக ஆற்றும் பெரும் சேவையாகும் என்றார்.

தொழில்நுட்பத்தின் பயன்கள் குறித்து பேசிய பிரதமர், சமீபத்தில் நடத்தப்பட்ட ஹக்கத்தான்-ஐ நினைவுக் கூர்ந்தார். அதில் இந்திய அரசில் உள்ள பல்வேறு அமைச்சகங்களில் 400 பிரச்சினைகள் கண்டறியப்பட்டதாகவும், அதற்கு தீர்வுகாண்பதற்காக இந்திய பல்கலைக்கழகங்களிலிருந்து 42,000 மாணவர்கள் 36 மணிநேரத்தை செலவிட்டதாகவும் தெரிவித்தார். அவர், இப்பயிற்சியில் வெளிகொணரப்பட்ட பல்வேறு தீர்வுகளை அமைச்சகங்கள் கடைப்பிடிப்பதாகவும் கூறினார்.

பிரதமர், “தகவல் தொழில்நுட்பம்” மற்றும் “இந்தியரின் திறமை” ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு, “நாளைய இந்தியா”வை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தொழில்நுட்பம் என்ற தலைப்பில் பேசிய பிரதமர், “செயற்கை நுண்ணறிவு” கொண்டு வரும் தாக்கங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் பேசினார்.

கடந்த காலங்களில் பல்வேறு நிகழ்வுகளில், வாழ்க்கையில் பலதரப்பட்ட மக்களும், ஏழைகளுக்கு உதவ முன்வந்ததை பிரதமர் குறிப்பிட்டார். இந்த சூழலில், எல்.பி.ஜி. மானியத்தை விட்டுக் கொடுக்கும் “விட்டு கொடுப்போம்“ முயற்சியின் வெற்றியை அவர் நினைவுக் கூர்ந்தார். அது போன்றே, அவர், நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், ஒவ்வொரு மாதம் 9ம் தேதியன்று கருவுற்ற ஏழை பெண்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் முயற்சியையும் குறிப்பிட்டார். அதே அடிப்படையில், வழக்கறிஞர்கள், ஏழைகள் மற்றும் தேவைப்படுவோருக்கு இலவச சட்ட உதவி வழங்கிட முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

நீதியரசர் தீபக் மிஸ்ரா மற்றும் நீதியரசர் ஜெ. செலாமேஸ்வர் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.