Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காசிப்பூர் மாவட்டம் ஹேம்பூரில் உள்ள 803 ஏக்கர் நிலத்தை உத்தராகண்ட் அரசிடம் மீண்டும் ஒப்படைத்தது நேப்பா நிறுவனம்


உத்தராகண்ட் மாநிலம், காசிப்பூர் மாவட்டம் ஹெம்பூரில் உள்ள 803 ஏக்கர் நிலத்தை நேப்பா நிறுவனம் உத்தராகண்ட் அரசிடம் மீண்டும் ஒப்படைத்தது. இதற்கான ஒப்பந்தத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு அளித்தது. நேப்பா நகரில் உள்ள நேப்பா நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும்.

பின்னணி:

நேப்பா நிறுவனத்திடம் ஹெம்பூரில் உள்ள 1987இல் 90 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு உத்திரப்பிரதேச மாநில தொழிற்சாலை முன்னேற்றக் கழகம் அளித்தது. சர்க்கரை உற்பத்தியில் உண்டாகும் கழிவுப் பொருட்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் செய்தித்தாள்களுக்கு பயன்படுத்தும் காகித ஆலைக்காக இந்த நிலம் ஒதுக்கப்பட்டது. அந்நேரத்திற்கு நடப்பிலிருந்த விலையின் வட்டி ரூ.149.23 லட்சம் செலுத்தப்பட்டது. மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் இதற்கான சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களுக்காக அனுமதி அளிக்காத காரணத்தினால், செய்தித்தாள் ஆலை நிறுவப்படவில்லை.

இதனால், உத்தராகண்ட் அரசு இந்நிலத்தை வேறு உபயோகத்திற்கு பயன்படுத்த திருப்பி அளிக்குமாறு கேட்டுக் கொண்டது. தற்போது நடப்பில் உள்ள விலையையும் இதற்காக வழங்க ஒப்புக் கொண்டது. இந்நிலம் உற்பத்தி ஏதுமின்றி இருப்பதால், மாநில அரசு இவ்விகிதத்தை பொதுமக்களுக்கு உபயோகப்படும் வகையில் அமைக்கும்.

*****