பி.எம்.இந்தியா
பொங்கல் பண்டிகையின் சிறப்புமிக்க நாளில், பிரதமர் திரு நரேந்திர மோடி, காசி தமிழ் சங்கமத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி குறித்த தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையில் ஒற்றுமையைக் கொண்டாடும் வகையில், பாரம்பரியங்கள், மொழிகள், சமூகங்கள் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் வகையில், கலாச்சார பரிமாற்றத்திற்கான துடிப்பான தளமாக இந்த முயற்சி எவ்வாறு மாறியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்துள்ளார்.
சோம்நாத் சுயமரியாதைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக சோம்நாத்திற்கு சமீபத்தில் தாம் சென்றபோது, காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகளுக்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்ததாகப் பிரதமர் கூறியுள்ளார். காசி தமிழ் சங்கமம் தொடர்பாக தமது எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் தாம் எழுதிய கட்டுரையின் இணையதள இணைப்பையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
“சோம்நாத் சுயமரியாதைப் பெருவிழாவை முன்னிட்டு அண்மையில் நான் சோம்நாத்திற்குச் சென்றிருந்தபோது, நான் சந்தித்த மக்கள், காசி தமிழ் சங்கமம், சௌராஷ்ட்ர தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகளைப் பாராட்டினார்கள். இன்று சிறப்புமிக்க பொங்கல் பண்டிகையின் போது, காசி தமிழ் சங்கமத்தின் வளர்ச்சி குறித்தும், ‘ஒரே பாரதம் உன்னத பாரதத்தின்’ உணர்வை அது எவ்வாறு வலுப்படுத்துகிறது என்பது பற்றியும் எனது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளேன்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214775®=3&lang=1
***
AD/PLM/RK
During my recent visit to Somnath during #SomnathSwabhimanParv, I met people who were appreciative of efforts such as the Kashi Tamil Sangamam and Saurashtra Tamil Sangamam. Today, on the special occasion of Pongal, shared my thoughts on the growth of the Kashi Tamil Sangamam and…
— Narendra Modi (@narendramodi) January 15, 2026
हाल ही में #SomnathSwabhimanParv के सिलसिले में मुझे सोमनाथ जाने का सौभाग्य मिला। इस दौरान ऐसे लोगों से भी मुलाकात हुई, जिन्होंने काशी-तमिल संगमम और सौराष्ट्र-तमिल संगमम जैसे प्रयासों की बहुत सराहना की। आज पोंगल के विशेष अवसर पर मैंने काशी-तमिल संगमम की अब तक की यात्रा के साथ ही…
— Narendra Modi (@narendramodi) January 15, 2026
சோம்நாத் சுயமரியாதைப் பெருவிழாவை முன்னிட்டு #SomnathSwabhimanParv அண்மையில் நான் சோம்நாத்திற்குச் சென்றிருந்தபோது, நான் சந்தித்த மக்கள், காசி தமிழ் சங்கமம், சௌராஷ்ட்ர தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகளைப் பாராட்டினார்கள். இன்று சிறப்புமிக்க பொங்கல் பண்டிகையின் போது, காசி தமிழ்…
— Narendra Modi (@narendramodi) January 15, 2026