Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காந்திநகரில் நாளை ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கியின் வருடாந்தர கூட்டத்தில் பங்கேற்கிறார். பிரதமர் இன்று குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.


பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று குஜராத்திற்கு இரண்டு நாள் பயணமாக செல்ல உள்ளார். இன்று கட்ச்சில், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அடிக்கல் நாட்டி, துவக்கி வைக்க உள்ளார். மே 23, செவ்வாய்க் கிழமை காந்திநகரில் நடைபெற உள்ள ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கியின் வருடாந்தர கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பார்.

 

நேற்று, பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில், தான் குஜராத்திற்கு மேற்கொள்ள உள்ள இரண்டு நாள் பயண விவரங்களை தொடர் பதிவுகள் மூலம் அறிவித்து இருந்தார்.

 

“நாளை, நான் குஜராத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளேன். அப்போது கட்ச் மற்றும் காந்தி நகரில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளேன்.”

 

“கண்டலா துறைமுகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, துவக்கி வைக்க உள்ளேன். காந்திதாம் பொது கூட்டத்தில் உரையாற்ற உள்ளேன்.”

“பாச்சாவோவில் உள்ள நீரேற்று நிலையத்தை துவக்கி வைத்து, பொது கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன். இதனை http://nm4.in/dnldapp பயன்படுத்தி உங்கள் கைப்பேசியில் பார்க்கலாம்”.

 

“எனது இதயத்தில் கட்ச்சிற்கு என தனி ஒரு சிறப்பு இடம் உண்டு. இந்த இடத்தில் சிறந்த மக்களும், மீண்டெழும் சக்தியும் உள்ளது.

  

“2001 நிலநடுக்கத்தில், யாரும் எண்ணி பார்க்க முடியாத அளவில் சேதம் அடைந்த கட்ச், தற்போது இந்தியாவில் விரைவாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்று.”   

 
“செவ்வாய்க் கிழமை,  காந்திநகரில் நடைபெற உள்ள @AfDB_Group கூட்டத்தின் துவக்க விழாவில் பங்கேற்க உள்ளேன்.”

 

@AfDB_Group தனது வருடாந்தர கூட்டத்திற்கு,  ‘ஆப்பிரிக்காவில் வளம் உருவாக்கும் வகையில் வேளாண் துறையில் உருமாற்றம்’ என்ற பொருத்தமான தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளது.”

@AfDB_Group வருடாந்தர கூட்டத்தின் போது, #AfDBAM2017 பங்கேற்க உள்ள சிறப்பு பிரமுகர்களை நான் சந்திக்க உள்ளேன்” என்று பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

 ****