Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காபூலில் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றக் கட்டிடம் அமைப்பது தொடர்பாக ரூ. 969 கோடிக்கான மாற்றியமைக்கப்பட்ட செலவின மதிப்பீடு


காபூலில் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றக் கட்டிடம் அமைப்பது தொடர்பாக ரூ. 969 கோடிக்கான மாற்றியமைக்கப்பட்ட செலவின மதிப்பீட்டுக்கு இன்று (27.01.2016) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் அளித்தது.

இந்தத் திட்டத்தின் படி ஆப்கானிஸ்தானுக்கு புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அமைத்துத் தரப்படும். ஆப்கானிஸ்தானின் பாரம்பரியம் மற்றும் அந்நாட்டின் நெறிகள் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும். ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை வலுவூட்டி மீண்டும் நிர்மாணிக்க இந்தியாவின் பங்களிப்பை எடுத்துக் காட்டும் வெளிப்படையான சின்னமாக இத்திட்டம் அமையும். ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற கட்டிடப் பணிகள் இந்தியா, ஆப்கானிஸ்தான் மேம்பாட்டு ஒத்துழைப்புத் திட்டத்தின் படி 2015 டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. ஒலி அமைப்பு முறை மற்றும் அறைகலன்கள் தொடர்பான சிறிய பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 2016 மார்ச் 31ந் தேதி இந்த நாடாளு மன்ற கட்டிடம் ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.

பின்னணி ;-
இந்தத் திட்டம் இந்தியப் பிரதமர் மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபரால் கூட்டாக 2015 டிசம்பர் 25ந் தேதி தொடங்கி வைத்து அர்ப்பணிக்கப்பட்டது. புதிதாக தொடங்கிவைக்கப்பட்ட கட்டிடத்தில் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற மேலவையான மெஷ்ரானோ ஜிர்கா, மக்களவையான ஓளேசி ஜிர்கா ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கிடையே உரையாற்றிய பிரதமர் அந்நாட்டின் ஜனநாயகத்தை நிறைவுக்குக் கொண்டுவரச் செய்தமைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் இந்நாட்டு மக்களையும் பாராட்டுவதாக தெரிவித்தார்.

•••••••