Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காமன்வெல்த் நாடுகளுடன் தனது வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்ள இந்தியா எவ்வாறு தயாராக உள்ளது என்பதை எடுத்துக்காட்டும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


காமன்வெல்த் நாடுகளுடன் இந்தியா தனது வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்ள எவ்வாறு தயாராக உள்ளது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.01.2026) பகிர்ந்து கொண்டுள்ளார்.

காமன்வெல்த் அவைத் தலைவர்களின் 28-வது மாநாட்டை இந்தியா நடத்தும் நிலையில், மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, “உலகம் ஒரே குடும்பம்” என்ற காலத்தால் அழியாத வசுதைவ குடும்பகம் என்ற நெறிமுறைகளுக்கான நாட்டின் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டியுள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மக்களவை செயலகத்தின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

“இந்தியா 28-வது காமன்வெல்த் அவைத் தலைவர்கள் மாநாட்டை நடத்தும் வேளையில், உலகம் ஒரே குடும்பம் என்ற உணர்வின் அடிப்படையில், நாடு அதன் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை காமன்வெல்த் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது என்பதை மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா (@loksabhaspeaker திரு @ombirlakota ) எடுத்துரைத்துள்ளார்.

இந்தியா தொழில்நுட்பத்தை ஒரு தனியுரிம சொத்தாகப் பார்க்கவில்லை. மாறாக உலகம் முழுவதும் ஜனநாயகத் தன்மையை வலுப்படுத்தும் ஒரு பொது நன்மையாகப் பார்க்கிறது என்று மக்களவைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214862&reg=3&lang=1

***

AD/PLM/RK