Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காமன்வெல்த் மகளிர் 51 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற சாக்ஷிக்கு பிரதமர் வாழ்த்து


கிளாஸ்கோவில் நடைபெறும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் 51 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சாக்ஷிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சாக்ஷியின் உறுதியான செயல்பாட்டையும் தீர்க்கமான வெற்றியையும் பிரதமர் பாராட்டியுள்ளார்.

அவர் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்தியுள்ள பிரதமர், எதிர்காலத்தில் இன்னும் பெரிய உயரங்களை எட்டுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“காமன்வெல்த் மகளிர் 51 கிலோ குத்துச்சண்டை பிரிவில் சாக்ஷிக்கு ஒரு மதிப்புமிக்க தங்கம் கிடைத்துள்ளது! அவரது சிறந்த செயல்பாடு, தீர்க்கமான வெற்றி ஆகியவற்றுக்கு வாழ்த்துகள். அவர் தொடர்ந்து மேலும் பல உயரங்களை எட்டட்டும்!”

****

(Release ID: 2293181)

TV/PLM/RJ