என்விஎஸ்-03 செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியாவின் உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான நாவிக் அமைப்பை வலுப்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றத்தை குறிப்பதாக இந்த வெற்றி உள்ளது என்று பிரதமர் கூறினார்.
மேம்படுத்தப்பட்ட திறன்களுடன் கூடிய என்விஎஸ்-03 செயற்கைக்கோள், முக்கியத் தொழில்நுட்பங்களில், இந்தியா தன்னிறைவு அடைவதற்கான முயற்சியை மேலும் முன்னெடுத்துச் செல்வதுடன், மக்களின் நலனுக்காக வழிகாட்டுதல் சேவைகளையும் வலுப்படுத்த உதவிடும்.
இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்புமிக்க சேவை, புத்திக் கூர்மைக்கும், பாராட்டுத் தெரிவித்த பிரதமர், அவர்களின் தொடர் சாதனைகள் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என்று கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
“என்விஎஸ்-03 செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்.
நமது உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான நாவிக் அமைப்பை வலுப்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றத்தை இந்த வெற்றிக் குறிக்கிறது. மேம்படுத்தப்பட்ட திறன்களுடன் கூடிய என்விஎஸ்-03, முக்கிய தொழில்நுட்பங்களில், நாடு தற்சார்பு அடைவதற்கான முயற்சியை மேலும் முன்னெடுத்துச் செல்வதுடன், நாட்டு மக்களுக்குப் பயனளிக்கும் வகையில், வழிகாட்டுதல் சேவைகளுக்கும் உதவிடும்.
இந்தியாவின் விண்வெளித் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பும், புத்திக்கூர்மையும், நாட்டிற்குத் தொடர்ந்து பெருமை சேர்ப்பதாக உள்ளன”.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330735®=3&lang=1
(Release ID: 2330735)
****
SS/SV/SH
Congratulations to our scientists and engineers at ISRO on the successful launch of GSLV-F18 carrying NVS-03. This mission marks an important step in strengthening NavIC, our indigenous satellite navigation system. Equipped with enhanced capabilities, NVS-03 will further our pursuit of self-reliance in critical technologies and support navigation services that benefit our people. The dedication and ingenuity of our space scientists continue to make our nation proud. @isro
— Narendra Modi (@narendramodi) October 31, 2026