Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 69 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் தீபக் லாத்தருக்கு பிரதமர் பாராட்டு


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தீபக் லாத்தருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

”நமது பளுதூக்கும் வீரர் வீராங்கனைகள் மிகச்சிறந்த திறனுடன் விளங்குகிறார்கள். எனது இளைய நண்பர் தீபக் லாத்தர் ஆடவர் 69 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்த இளைஞருக்கு எனது பாராட்டுகள். அவரது எதிர்கால சாதனைகளுக்கு எனது நல்வாழ்த்துகள்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

கோல்டுகோஸ்ட்டில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் 69 கிலோ பிரிவில் இந்தியாவின் பளுதூக்கும் வீரர் தீபக் லாத்தர் வெண்கலப் பதக்கத்தை வென்று காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்லும் மிக இளம் வயது வீரர் ஆகிறார்.