Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காமன்வெல்த் விளையாட்டு 2026-ல் இந்தியக் குழுவினரின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் பெருமிதம்


கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு 2026 போட்டிகளில் இந்தியக் குழுவினரின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியா 13 தங்கப்பதக்கங்கள் உட்பட 39 பதக்கங்களை வென்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர், பதக்கம் வென்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் இந்திய வீரர்கள் சிறப்பான திறமை, மனஉறுதி, அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தியதாகத் திரு மோடி கூறியுள்ளார். மேலும், அவர்களுடைய கடின உழைப்பு நாட்டின் இளைஞர்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்தியக் குழுவினரின் எதிர்கால முயற்சிகளுக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள திரு மோடி, அவர்கள் நாட்டிற்கு தொடர்ந்து பெருமை சேர்ப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி, குறிப்பிட்டிருப்பதாவது;

“கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் நமது குழுவினரின் செயல்பாடு பெருமை அளிக்கிறது.

இந்தியா 13 தங்கம் உட்பட 39 பதக்கங்களை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்துகள்.

விளையாட்டு முழுவதும் நமது வீரர்கள் சிறந்த திறமை, மனஉறுதி, அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தினார்கள். அவர்களுடைய கடின உழைப்பு நமது இளைஞர்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.

இந்தியக் குழுவினரின் எதிர்கால முயற்சிக்கும் எனது வாழ்த்துகள். அவர்கள் தொடந்து சிறப்பாக செயல்பட்டு நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்கட்டும்.”

***

(Release ID: 2293569)

VJ/PD/IR/SM/KR