Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். “இந்த தினம், நாட்டின் பெருமையைப் பாதுகாக்க தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த இந்தியத் தாயின் வீரத்திருமகன்களின் இணையற்ற துணிச்சலையும் வீரத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது” என்று திரு. மோடி கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

“கார்கில் வெற்றி தினத்தன்று நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகள். நாட்டின் சுயமரியாதையைப் பாதுகாக்க தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த இந்தியத் தாயின் துணிச்சலான மகன்களின் ஒப்பற்ற துணிச்சலையும் வீரத்தையும் இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது. தாய்நாட்டிற்காக உயிர் துறக்க வேண்டும் என்ற அவர்களின் வேட்கை, ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். ஜெய் ஹிந்த்!”

****

(Release ID: 2148725)

AD/PKV/SG