Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கால்நடை பராமரிப்பு, பால் பொருட்கள் மற்றும் மீன் வளத்துறையில் ஒத்துழைப்புக்காக இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி அமைச்சரவை கூட்டத்தில் விவரிக்கப்பட்டது


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுடன் கால்நடை பராமரிப்பு, பால் பொருட்கள் மற்றும் மீன்வளத் துறை ஆகியவற்றில் ஒத்துழைப்புக்காக செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விவரிக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பதம் 17.04.2018 அன்று கையெழுத்தானது.

இந்தியக் கால்நடைகள் மற்றும் மீன்வளத்தின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்வதற்காக கால்நடை பராமரிப்பு, பால் பொருட்கள் மற்றும் மீன்வளத்துறை ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

தாக்கம்:

உள்நாட்டு நுகர்வு மற்றும் ஏற்றுமதிக்கான பால் பொருட்கள், மீன்கள் மற்றும் கால் நடை பொருட்களை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் கால்நடைகளின் ஆரோக்கியம், கால்நடைகள் வளர்ச்சி மற்றும் மீன்களின் வளம் ஆகியவற்றை இந்த கூட்டணி மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கால்நடை பராமரிப்பு, மீன் வளம் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றில் கீழே குறிப்பிட்டதன் மூலம் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேம்படுத்தும்:

கால்நடை பராமரிப்பு, மீன் வளம் மற்றும் அவை தொடர்பான விஷயங்களில் பரஸ்பர கவலை மற்றும் ஆர்வம் கொண்ட விஷயங்கள்

கால்நடை ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு, வளர்ப்பு, பால் பொருட்கள் மற்றும் மீன்வளம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு

ஊட்டச்சத்து உண்வு மற்றும் தீவன செறிவூட்ட நிர்வாகம் மற்றும் நுணுக்கம் மற்றும் அவற்றை பற்றாக்குறை இடங்களுக்கு அதிக அளவில் கொண்டு சென்று அதன் மூலம் அதிக உற்பத்தியை ஈட்டுவது

கால்நடைகள், விலங்குகள் பராமரிப்பு மற்றும் விலங்கு பொருட்கள் வர்த்தகம் தொடர்பான விவகாரங்களில் துப்புரவு

உயர் தொழில்நுட்ப தீவன மர இனங்கள் நாற்றங்கால்களை தீவனப் பயிர்களுடன் உருவாக்குவது, வறட்சியான பகுதிகளில் மண் ஈரத்தன்மை உள்ளிட்ட ஒருங்கிணைந்த பண்ணை முறையின் கீழ் தீவன மர இனங்களை நடுவதற்காக வேளாண் வன மேம்பாடு,

பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிகளில் அறிவியல் ரீதியான பணியாளர்கள் ஆய்வுப் பயணம்/பயிற்சிக்காக பரிமாற்றம்

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட புதுமையான வேளாண்மை விரிவாக்க அணுகுமுறைக்கு கூட்டு ஆராய்ச்சிக்கான கூட்டணி

இணைந்த ஆர்வம் கொண்ட இதர விஷயங்கள்

ஒவ்வொரு தரப்பிலும் பிரதிநிதிகள் கொண்ட கூட்டு பணிக்குழு உருவாக்கப்பட்டு கூட்டு நிகழ்ச்சிகளை உருவாக்கவும் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனை செய்யப்படும்.
பின்னணி:

வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சகத்தின் கால்நடை பராமரிப்பு, பால் பொருட்கள் மற்றும் மீன்வளத்துறை, இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் சுற்றுச்சூழல், உணவு மற்றும் ஊரக விவகாரங்கள் துறை கடந்த 2018 ஏப்ரலில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. கால்நடை பராமரிப்பு, பால் பொருட்கள் மற்றும் மீன் வளத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.