பி.எம்.இந்தியா
குஜராத்தில் புனரமைக்கப்பட்ட சோமநாதர் ஆலயம் திறக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நடைபெற்ற சோமநாதரின் அமிர்தப் பெருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார்.
சோமநாதர் ஆலய வளாகத்தில் அதன் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்நிகழ்ச்சியை ஒரு சடங்கு ரீதியான நிகழ்வு என்பதை விட, இந்தியாவின் நிலைத்த உணர்வு மற்றும் நாகரிகத்தின் மீள்திறனுக்கான ஒரு பிரகடனம் என்று பாராட்டினார். வேத மந்திரங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு ஆகியவை ஒன்றிணைந்து அந்தப் புனிதத் தலத்தின் புனரமைப்பைக் கொண்டாடியதால், தெய்வீக பக்தியும் தேசியப் பெருமிதமும் பின்னிப் பிணைந்திருந்த அந்த மகத்தான கூட்டத்தில், தெய்வீக பக்திக்கு நிகராக தேச பக்தி வெளிப்பட்டது.
சில மாதங்களுக்கு முன் சோம்நாத் சுயமரியாதை விழாவின் போது மேற்கொண்ட தமது அண்மைக்கால பயணத்தை நினைவு கூர்ந்த பிரதமர், இந்த இரண்டு நினைவு நாட்களையும் அடுத்தடுத்து காண்பதன் தனித்துவமான முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். “முதல் அழிவுக்குப் பின் 1000 ஆண்டுகள் கழிந்தும் சோமநாதர் அழிவற்றவராக விளங்கும் பெருமையையும், இன்று இந்த நவீன வடிவிலான பிராண பிரதிஷ்டையின் 75-வது ஆண்டு நிறைவையும் குறிக்கும் வகையில், ஆயிரம் ஆண்டுகால அழியாத பயணத்தை அனுபவிக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது,” என்று திரு மோடி உறுதிப்படுத்தினார்.
1951-ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதன் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், அது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல என்றார். “இந்தியா 1947-ல் சுதந்திரம் அடைந்தது என்றால், 1951-ல் சோமநாதரின் பிராண பிரதிஷ்டை இந்தியாவின் சுதந்திர உணர்வைப் பிரகடனப்படுத்தியது,” என்று திரு மோடி திட்டவட்டமாகக் கூறினார்.
இந்தியாவின் சுதந்திரம் பெற்று நான்கு ஆண்டுகளுக்குப் பின், 1951-ல் கோயில் புனரமைக்கப்பட்டதன் ஆழ்ந்த முக்கியத்துவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், சர்தார் வல்லபாய் பட்டேலின் 500 சமஸ்தானங்களின் அரசியல் ஒருங்கிணைப்பிற்கும், சோம்நாத்தை மீண்டும் கட்டியெழுப்ப அவர் கொண்டிருந்த உறுதிக்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க ஒப்பீட்டைச் சுட்டிக்காட்டினார். “தேசம் அந்நிய ஆதிக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டபோது, சோம்நாத்தின் புனரமைப்பு, இந்தியா சுதந்திரம் அடைந்தது மட்டுமல்ல, அது ஏற்கனவே தனது பண்டைய பெருமையை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை உலகிற்கு ஒரே நேரத்தில் பறைசாற்றியது” என்று திரு மோடி குறிப்பிட்டார்.
உலகளாவிய நலனுக்கான பாடங்களை வழங்கிய பல்லாயிரம் ஆண்டுகால ஆன்மீக உணர்வுநிலைக்குச் சாட்சியாக இருந்ததாகப் பிரதமர் கூறினார். சோமநாதர் மீதான மனவுறுதியில் பொதிந்துள்ள இந்தியாவின் அழிவற்ற சாராம்சம் குறித்த தனது பார்வையை அவர் விளக்கினார். “நூற்றாண்டுகால கொடிய முயற்சிகளால் அழிக்க முடியாத, தோற்கடிக்க முடியாத இந்தியாவின் அழிவற்ற வடிவத்தை நான் இங்கே காண்கிறேன்,” என்று திரு மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தேசிய வரலாற்றில் மற்றொரு மைல்கல்லான மே 11-ஆம் தேதியுடன் இந்த நாளைத் தொடர்புபடுத்திப் பேசிய அவர், 1998-ம் ஆண்டு இந்தியா நடத்திய பொக்ரான் அணுகுண்டு சோதனைகளின் ஆண்டு நிறைவு நாளையும் மே 11 குறிக்கிறது என்று கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நினைவூட்டினார். இந்திய விஞ்ஞானிகளின் திறனை வெளிப்படுத்தும் விதமாக, மே 11 அன்று நாடு மூன்று அணுகுண்டு வெடிப்புச் சோதனைகளை நடத்தியதை அவர் விவரித்தார். இந்தியாவின் அசைக்க முடியாத அரசியல் உறுதிப்பாட்டிற்குச் சான்றாக, மே 13 அன்று நடத்தப்பட்ட அடுத்தடுத்த சோதனைகளை அவர் சுட்டிக்காட்டினார். “அந்த நேரத்தில் ஒட்டுமொத்த உலகின் அழுத்தமும் இந்தியா மீது இருந்தது, ஆனால் அடல் அவர்கள் தலைமையின் கீழ், அப்போதைய அரசு, எங்களுக்கு தேசமே முதன்மையானது, உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை மண்டியிட வைக்கவோ அல்லது அழுத்தத்திற்கு உள்ளாக்கவோ முடியாது என்பதை நிரூபித்தது” என்று திரு மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பொருளாதார மாற்றத்தில் கோயில் அறக்கட்டளையின் பங்கை ஏற்றுக்கொண்ட பிரதமர், சோம்நாத் எவ்வாறு ஒருங்கிணைந்த வளர்ச்சியின் கலங்கரை விளக்கமாகவும், ஒரே நேரத்தில் ஒரு ஆன்மீக மையமாகவும், நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கும் ஆயிரக்கணக்கான வாழ்வாதாரங்களுக்கும் பயனளிக்கும் ஒரு பொருளாதார எந்திரமாகவும் உருவெடுத்துள்ளது என்பதை எடுத்துரைத்தார். “இந்தக் கோயில் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்களை ஈர்க்கிறது, மேலும் அவர்களின் வருகை இப்பகுதி முழுவதும் செழிப்பை உருவாக்குகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
சமகால சவால்கள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர், பிளவுபடுத்தும் சக்திகள் இன்றும் செல்வாக்குடன் இருப்பதாகக் கூறினார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கலாச்சாரத் திட்டங்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளை அவர் அண்மைக்கால உதாரணமாகக் குறிப்பிட்டார். இதுபோன்ற பிளவுபடுத்தும் சிந்தனைகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார். தேசிய வளர்ச்சியின் இரு பரிமாணங்களையும் மதிக்கும் சமச்சீரான முன்னேற்றத்திற்கான ஒரு தொலைநோக்குப் பார்வையை அவர் முன்வைத்தார். “வளர்ச்சியையும் பாரம்பரியத்தையும் ஒருசேரக் கொண்டு நாம் முன்னேற வேண்டும்,” என்று திரு மோடி உறுதிப்படுத்தினார்.
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சோமநாதரின் பிரதிஷ்டை ஒரு மாற்றத்திற்கான பயணத்தைத் தொடங்கி வைத்தது என்பதை நினைவூட்டி, “இன்று, அந்தப் பயணம் இன்னும் விரிவான வடிவில் நம் முன் நிற்கிறது. நமது மரபுகளில் வேரூன்றி இருக்கும் அதே வேளையில், நாம் அதை இன்னும் உயர்ந்த சிகரங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்; இதுவே நமது காலத்தின் கட்டளை,” என்று வருங்கால சந்ததியினருக்கு அழைப்பு விடுத்து தனது உரையைப் பிரதமர் திரு மோடி நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259791®=3&lang=1
****
TV/SMB/SH
Speaking at the Somnath Amrut Mahotsav. The Somnath Temple stands as a beacon of unwavering faith, divinity and a sacred symbol of India’s eternal soul. https://t.co/otO2YOCCUL
— Narendra Modi (@narendramodi) May 11, 2026
75 साल पहले... आज के ही दिन सोमनाथ मंदिर की पुनर्स्थापना... ये कोई साधारण अवसर नहीं था।
— PMO India (@PMOIndia) May 11, 2026
अगर 1947 में भारत आजाद हुआ था... तो, 1951 में सोमनाथ की प्राण प्रतिष्ठा ने... भारत की स्वतंत्र चेतना का उद्घोष किया था: PM @narendramodi pic.twitter.com/CG3x0dTXbz
सोमनाथ अमृत-महोत्सव... ये अगले एक हजार वर्षों के लिए भारत की प्रेरणा है। pic.twitter.com/HypSK96Oai
— PMO India (@PMOIndia) May 11, 2026
लुटेरों ने सोमनाथ मंदिर का वैभव मिटाने का प्रयास किया। वो सोमनाथ को एक भौतिक ढांचा मानकर उससे टकराते रहे! बार-बार इस मंदिर को तोड़ा गया...
— PMO India (@PMOIndia) May 11, 2026
ये बार-बार बनता रहा... हर बार उठ खड़ा होता रहा! pic.twitter.com/LVlASBovVF
सोमनाथ मंदिर का पुनर्निर्माण भी हुआ... और देश ने सदियों के कलंक को भी धो दिया: PM @narendramodi pic.twitter.com/Q1Cm09oXuz
— PMO India (@PMOIndia) May 11, 2026
सोमनाथ हमें याद दिलाता है कि कोई भी राष्ट्र तभी लंबे समय तक मजबूत रह सकता है, जब वो अपनी जड़ों से जुड़ा रहे: PM @narendramodi pic.twitter.com/8bFkJ1c4Fg
— PMO India (@PMOIndia) May 11, 2026