Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத் மாநிலம் வதோதரா அருகே கிராமப்புறப் பகுதியில் நேரிட்ட விபத்தில், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


குஜராத் மாநிலம் வதோதரா அருகே கிராமப்புறப் பகுதியில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“குஜராத் மாநிலம் வதோதரா அருகே கிராமப்புறப் பகுதியில் நேரிட்ட விபத்தில், உயிரிழப்புகள் ஏற்பட்ட செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர் @நரேந்திரமோடி”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274051&reg=3&lang=1

(Release ID: 2274051)

****

TV/SV/SH