Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத் மாநிலம் வாசாதில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்ப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் 4.64 ஹெக்டேர் நிலத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு மாற்றித்தர மத்திய அமைச்சரவை ஒப்புதல்


குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் வாசாதில் உள்ள வேளாண் ஆராய்ச்சி இந்திய மையத்தின் இந்திய மண் மற்றும் நீர்ப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் 4.64 ஹெக்டேர் (46, 384 சதுர மீட்டர்) நிலத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு மாற்றித்தர பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. தேசிய நெடுஞ்சாலை 8 – ல் அகமதாபாத் – வடோதரா நெடுஞ்சாலைப் பகுதியை ஆறுவழிச் சாலையாக மாற்றி விரிவு படுத்துவதற்காக இந்த நிலம் ரூ. 12.67 கோடி விலைக்கு மாற்றத் தரப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை 8 வடோதரா மற்றும் அகமதாபாத்தை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையாகும். அகமதாபாத் – வடோதரா பகுதியை ஆறு வழிப்பாதையாக மாற்றி விரிவுபடுத்துவதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு இந்த நிலம் மாற்றித் தரப்படுகிறது. இதனால் இந்தப் பகுதி பயன் அடைந்து அடிப்படை வசதி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, வேலைவாய்ப்பு உற்பத்தி போன்ற பல வாய்ப்புகளை உயர்த்தும். வளர்ச்சி வேகத்தை விரைவுபடுத்துவதற்கான அரசின் அடிப்படை வசதி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.